உலகக் கோப்பையை வென்று வருமா டிராவிட் அணி?

Posted By: Staff

கிறிஸ்ட்சர்ச்: 19 வயதுக்குட்பட்டோருக்கான, 12வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் 13ம் தேதி துவங்குகிறது. 14ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்திய அணி.

நியூசிலாந்தில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில், 16 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் லீக் முறையில் மோதும். இந்தப் போட்டிகள் 13ம் தேதி துவங்குகிறது.

U19 world cup starts

பி பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, பப்புவா நியூ குய்னா அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா, 14ம் தேதி ஆஸ்திரேலியா, 16ம் தேதி பப்புவா நியூ குய்னா, 19ம் தேதி ஜிம்பாப்வே அணிகளுடன் மோதுகிறது.

ஏ பிரிவில் கென்யா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் உள்ளன. சி பிரிவில் வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, நமீபியா அணிகளும், டி பிரிவில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் உள்ளன.

இந்தியா இதற்கு முன், 2000, 2008, 2012ல் கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மட்டுமே மூன்று முறை கோப்பையை வென்றுள்ளன. கடந்த முறை, பைனலில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

முகமது கைப், யுவராஜ் சிங், விராட் கோஹ்லி போன்ற வீரர்களை அடையாளம் காட்டிய முந்தைய உலகக் கோப்பை வெற்றிகளைப் போல, கோச் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இந்த உலகக் கோப்பையை வென்று, பல திறமைகளை வெளிகொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, இந்திய வீரர்கள் மிகவும் தெம்புடன் உள்ளனர். இதுவரை 4 முறை உலகக் கோப்பையை எந்த அணியும் வென்றதில்லை. அந்த சாதனையை இந்திய அணி உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி:

பிருத்வி ஷா (கேப்டன்), . ஷுப்மான் கில் (துணை கேப்டன்), மன்ஜோத் கர்லா, ஹிமான்ஷூ ராணா, அபிஷேக் சர்மா, ரியான் பாரக், ஆர்யான் ஜோயல் (விக்கெட் கீப்பர்), ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி, இஷான் பெரேல், அர்ஷ்தீப் சிங், அனுகுல் ராய், ஷிவா சிங், பங்கஜ் யாதவ்,

Story first published: Thursday, January 11, 2018, 14:49 [IST]
Other articles published on Jan 11, 2018
Please Wait while comments are loading...