For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோற்று திரும்பிய பாக். கிரிக்கெட் அணிக்கு, ஏர்போர்ட்டில் ரசிகர்கள் கொடுத்த 'அசிங்க' வரவேற்பு

By Veera Kumar

லாகூர்: உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் படுதோல்வியை அடைந்து தாயகம் திரும்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு லாகூர் ஏர்போர்ட்டில் மோசமான ஒரு வரவேற்பை அளித்துள்ளனர் அந்த நாட்டு ரசிகர்கள்.

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா இடம் பெற்றிருந்த குரூப்-2ல் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேச அணிகள் இடம் பிடித்திருந்தன.

இதில் இந்தியாவும், நியூசிலாந்தும், அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. குரூப்-1ல் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் வரும் 31ம் தேதி இந்தியா அரையிறுதி போட்டியில் மோதுகிறது.

செமி நஹி

செமி நஹி

அதேநேரம், இந்தியாவுக்கு ஈடுகொடுக்கும் அணி என்று அந்த நாட்டு ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானோ, லீக் ஆட்டங்களில் படுதோல்விகளை சந்தித்து, அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் நாடு திரும்பியுள்ளது.

வங்கதேசத்திடம்தான் வீரம்

வங்கதேசத்திடம்தான் வீரம்

சூப்பர்-10 லீக் ஆட்டங்களில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்ற பாகிஸ்தான், நடுவே வங்கதேசம் அணியிடம் மட்டுமே வெற்றி கண்டது.

ஏர்போர்ட்டில் ரசிகர்கள்

ஏர்போர்ட்டில் ரசிகர்கள்

இதையடுத்து, பாகிஸ்தான் அணி, நேற்று தாயகம் திரும்பியது. அணி வீரர்கள், லாகூர், அல்லமா இக்பால் சர்வதேச ஏர்போர்ட்டுக்கு வந்த அணியினரை காண, ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஏர்போர்ட்டில் திரண்டிருந்தனர்.

போலீஸ் குவிப்பு

போலீஸ் குவிப்பு

வழக்கமாக வீரர்களை வாழ்த்தவே ஏர்போர்ட்டில் ரசிகர்கள் திரளுவார்கள். ஆனால், பாகிஸ்தான் வீரர்களை திட்டி தீர்க்கவே ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதையறிந்து, ஏர்போர்ட்டில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஷேம், ஷேம்

வீரர்கள் தங்கள் லக்கேஜ்களுடன் வெளியே நடந்து சென்றபோது, இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள், அவர்களை பார்த்து, ஷேம்.. ஷேம்..(அசிங்கம்..) என கோஷமிட்டனர். இது வீரர்களுக்கு மிகுந்த அவமானத்தை தருவதாக இருந்தது. இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளனர்.

Story first published: Tuesday, March 29, 2016, 12:56 [IST]
Other articles published on Mar 29, 2016
English summary
The returning players faced chants of "shame shame" when they landed at the Allama Iqbal international airport in Lahore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X