கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோல்வியடைந்தது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்ட்களில் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
தண்ணிக்கு போராடும் கேப்டவுன் நகரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்தது. இந்தப் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதாக, ஆஸ்திரேலிய வீரர்கள் மீது புகார் எழுந்தது. அதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்கா, இரண்டு இன்னிங்சில், 311 மற்றும் 373 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 430 ரன்கள் தேவை என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது.
ஒரு கட்டத்தில், விக்கெட் இழப்பின்றி, 57 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 50 ரன்களுக்கு, 10 விக்கெட்களையும் இழந்து, தோல்வியடைந்தது.
அதையடுத்து, 2-1 என, தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. மார்ச் 30ல் கடைசி டெஸ்ட் போட்டி துவங்குகிறது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.
கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!