For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஹானே 4வது இடத்தில விளையாடலைன்னா ஆச்சர்யப்படுவேன்... அகர்கர் இப்படி சொல்லியிருக்காரு!

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை மறுதினம் துவங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அஜிங்க்யா ரஹானே செயல்பட உள்ளார்.

இதனிடையே, அஜிங்க்யா ரஹானே, 4வது இடத்தில் தன்னை உயர்த்திக் கொள்ளவில்லை என்றால் மட்டுமே தான் ஆச்சர்யம் கொள்வேன் என்று முன்னாள் பௌலர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு... மெல்போர்னுக்கு மாற்றப்படும் 3வது டெஸ்ட்.. நீடிக்கும் சிக்கல் கொரோனா பாதிப்பு... மெல்போர்னுக்கு மாற்றப்படும் 3வது டெஸ்ட்.. நீடிக்கும் சிக்கல்

மேலும் விராட் கோலிக்கு பதிலாக சுப்மன் கில் விளையாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை துவக்கம்

சனிக்கிழமை துவக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை மறுதினம் 2வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது. முதலில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை கண்டுள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் கேப்டன் கோலி மற்றும் பௌலர் முகமது ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை.

ரஹானே கேப்டன்

ரஹானே கேப்டன்

இதையடுத்து அஜிங்க்யா ரஹானே அடுத்த 3 போட்டிகளில் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில், அஜிங்க்யா ரஹானே, சிறப்பான வீரர் என்றும் வெளிநாடுகளில விளையாடிய அனுபவம் உள்ளவர் என்றும் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் புகழ்ந்துள்ளார்.

கோலிக்கு பதிலாக கில்

கோலிக்கு பதிலாக கில்

இந்நிலையில் கோலி இல்லாத நிலையில், தன்னை 4வது இடத்தில் விளையாட அவர் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு விளையாடவில்லை என்றால் மட்டுமே தான் ஆச்சர்யம் கொள்வேன் என்றும் அகர்கர் கூறியுள்ளார். மேலும் கோலி இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக சுப்மன் கில் விளையாட வேண்டும் என்றும் அகர்கர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு போட்டியில் தீர்மானிக்கக்கூடாது

ஒரு போட்டியில் தீர்மானிக்கக்கூடாது

பிரித்வி ஷா குறித்து பேசிய அகர்கர், துவக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும் என்பதை ஒப்பு கொண்டுள்ளார். குறிப்பாக வெளிநாட்டு சூழலில் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே மிடில் ஆர்டர் வீரர்கள் சுலபமாக விளையாட முடியும் என்றும் ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே கொண்டு ஒரு வீரரை மோசமான வீரராக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, December 24, 2020, 17:16 [IST]
Other articles published on Dec 24, 2020
English summary
One Test doesn't make you a good player or a bad player -Ajit Agarkar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X