For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாளை இந்தியாவுக்குப் புறப்படுகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி?

லாகூர்: டுவென்டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட்தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இந்தியாவுக்கு புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தானின் ஜியோ டிவி வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தரம்சலா விவகாரம் தொடர்பாக முடியும் தெரியும் வரை இந்தியாவுக்குப் போக வேண்டாம் என பாகிஸ்தான் அணியை வாரியம நிறுத்தி வைத்திருந்தது.

WT20: Pakistan team may leave for India tomorrow

தற்போது தரம்சலா போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டிருப்பதால் பாகிஸ்தான் அணியின் பயணத்தை வாரியம் அனுமதிக்கும் என்று தெரிகிறது என்று அந்த செய்தி தெரிவித்துள்ளது.

மார்ச் 19ம் தேதி தரம்சலாவில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்தன. அந்தப் போட்டி தற்போது கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

முன்னதாக இந்த சர்ச்சை காரணமாக செவ்வாய்க்கிழமை மாலையே இந்தியா வரவிருந்த பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 10, 2016, 17:44 [IST]
Other articles published on Mar 10, 2016
English summary
The Pakistan national cricket team may depart for the World Twenty20 tournament in India on Friday. According to a report by Geo TV, the Pakistan Cricket Board (PCB) is likely to allow the team to depart for the neighbouring country after the Super 10 Group 2 clash against India was shifted from Dharamsala to Kolkata.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X