செம ரெக்கார்டு.. எந்த அணியாலும் செய்ய முடியாததை செய்து காட்டிய இந்திய பவுலிங் கூட்டணி!

மும்பை : 2019ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் வேகப் பந்துவீச்சாளர்களின் ஆண்டு என்று தான் கூற வேண்டும்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்த காலத்திலும் வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதில்லை.

கபில் தேவ், ஸ்ரீநாத், ஜாகிர் கான் உள்ளிட்டோர் குறிப்பிட்ட காலத்தில் சிறப்பான வேகப் பந்துவீச்சாளர்களாக விளங்கினாலும் ஒரு குழுவாக வேகப் பந்துவீச்சாளர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தியதில்லை.

வேகப் பந்துவீச்சாளர்கள்

வேகப் பந்துவீச்சாளர்கள்

அந்த குறையை போக்கி இருக்கிறார்கள் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று வரும் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா.

மூவர் கூட்டணி

மூவர் கூட்டணி

இந்திய அணி ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வருகிறது. வெகு சில போட்டிகளில் மட்டும் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. இந்தியா அதிகம் பயன்படுத்திய அந்த மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் கூட்டணி - ஷமி, இஷாந்த் மற்றும் உமேஷ்.

81 விக்கெட்

81 விக்கெட்

இவர்கள் மூவரும் 2019ஆம் ஆண்டில் மிகக் குறைந்த பந்துவீச்சு சராசரி வைத்துள்ள வேகப் பந்துவீச்சாளர்கள் கூட்டணியாக விளங்குகின்றனர். இந்த மூவரும் இந்த ஆண்டு 81 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இவர்களின் சராசரி 20க்கும் கீழ் உள்ளது.

விக்கெட்கள் - சராசரி விவரம்

விக்கெட்கள் - சராசரி விவரம்

முகமது ஷமி - 8 போட்டிகள், 33 விக்கெட்கள், சராசரி - 16.66.

இஷாந்த் சர்மா - 6 போட்டிகள், 25 விக்கெட்கள், சராசரி - 15.56.

உமேஷ் யாதவ் - 4 போட்டிகள், 23 விக்கெட்கள், சராசரி - 13.65.

பும்ரா - 3 போட்டிகள், 14 விக்கெட்கள், சராசரி - 13.14.

சுழற்பந்துவீச்சாளர்கள் நிலை

சுழற்பந்துவீச்சாளர்கள் நிலை

இந்திய டெஸ்ட் அணி என்றாலே சுழற் பந்துவீச்சாளர்கள் தான் முன்னிலை பெறுவார்கள். அது போல, இந்திய ஆடுகளங்கள் என்றாலே சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்ற பேச்சும் இருந்தது. அந்த இரண்டுமே 2019இல் வேகப் பந்துவீச்சாளர்களால் உடைத்து எறியப்பட்டது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

2019ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் நடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடரில் வேகப் பந்துவீச்சாளர்கள் தான் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் தான் விக்கெட்களை அள்ளினர்.

அஸ்வின், ஜடேஜா

அஸ்வின், ஜடேஜா

அதிலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவுக்கு பந்துவீச ஓவர் கிடைப்பதே அபூர்வமான விஷயமாக மாறியது.

பும்ரா மிரட்டல்

பும்ரா மிரட்டல்

பும்ரா காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை. அவர் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் மிரட்டல் பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களையே மிரள வைத்தார். ஹாட்ரிக் சாதனையும் நிகழ்த்தினார்.

துல்லிய ஷமி

துல்லிய ஷமி

அதே போல, முகமது ஷமி துல்லிய ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சால் அசத்தினார். டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் பந்துவீசுவது கடினம் என்ற பேச்சு இருக்கும் நிலையில், அதில் ஸ்பெஷலிஸ்ட் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வியக்க வைத்தார்.

உமேஷ் யாதவ் அசத்தல்

உமேஷ் யாதவ் அசத்தல்

உமேஷ் யாதவ் இந்திய மண்ணில் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். அணியின் மூத்த பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா, இளைய தலைமுறையினருக்கு ஈடு கொடுத்து பந்துவீசினார். பல சமயம் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் கட்டுக் கோப்பாக பந்து வீசி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தார். 2020ஆம் ஆண்டிலும் இந்த கூட்டணி கிரிக்கெட் உலகை மிரட்டக் காத்திருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Year end 2019 : Indian fast bowling unit proved as best test unit in 2019.
Story first published: Friday, December 27, 2019, 19:37 [IST]
Other articles published on Dec 27, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X