For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2018இல் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த வருங்கால நட்சத்திரங்கள்.. யார் யார் தெரியுமா?

மும்பை : இந்திய கிரிக்கெட்டில் 2018ஆம் ஆண்டில் பல புதிய வீரர்கள் அறிமுகம் ஆனார்கள். அதில் குறிப்பிட்ட சிலர் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளவர்கள் என கணிக்கலாம்.

அப்படிப்பட்ட நான்கு புதிய வீரர்களையும், நீண்ட காலம் கழித்து மறுபடியும் அணியில் இடம் பிடித்து 2019 உலகக்கோப்பையில் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என கணிக்கப்படும் ஒரு வீரரை பற்றியும் பார்ப்போம்.

[2018 பிளாஷ் பேக்]

கலக்கல் கலீல் அஹ்மது

கலக்கல் கலீல் அஹ்மது

உலகக்கோப்பை தொடருக்கு என இந்தியா சில வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது. பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பண்டியா ஆகியோர் அந்த பட்டியலில் உள்ளனர். இவர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டாலோ, கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்ற நிலை வந்தாலோ இந்தியா திணறி வருகிறது. அதற்கு தீர்வாக வந்தவர் தான் கலீல் அஹ்மது.

உலகக்கோப்பை வாய்ப்பு

உலகக்கோப்பை வாய்ப்பு

21 வயதே ஆன கலீல் அஹ்மது, 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியின் அடுத்த கட்ட நம்பிக்கையான வீரராக இனம் காணப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரில் கூடுதல் பந்துவீச்சாளராக இடம் பெற்று சில போட்டிகளிலும் இவர் ஆட அதிக வாய்ப்புள்ளது.

அதிரடி கீப்பர் ரிஷப் பண்ட்

அதிரடி கீப்பர் ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்க்க வந்தவர். அப்படியே, ஒருநாள் அணியில் தோனியின் இடத்தை நிரப்பும் அடுத்த விக்கெட் கீப்பர் இவர் தான் என அறியப்படுகிறார். பேட்டிங்கில் மட்டும் கொஞ்சம் பொறுப்பு வரவேண்டும். கீப்பிங்கில் தன் முதல் போட்டியில் இருந்ததை விட, குறுகிய காலத்தில் பல மடங்கு முன்னேறியுள்ளார்.

காத்திருந்த மாயன்க் அகர்வால்

காத்திருந்த மாயன்க் அகர்வால்

ரஞ்சி தொடர்களில் தொடர்ந்து ரன் குவித்து விட்டு பல மாதங்களாக அணியில் இடம் கிடைக்காதா என காத்திருந்தவர் மாயன்க் அகர்வால். வருடத்தின் கடைசி வாரத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் மிக சிறப்பான பங்களிப்பை அளித்து டெஸ்ட் அணியின் துவக்க வீரர் பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

ப்ரித்வி ஷாவின் அதிரடி வருகை

ப்ரித்வி ஷாவின் அதிரடி வருகை

தனித்துவமான பேட்டிங் திறன் கொண்ட ப்ரித்வி ஷா அடுத்த சச்சின் என உள்ளூர் போட்டிகளின் போதே புகழப்பட்ட வீரர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து கலக்கியவர். அடுத்து ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக களமிறங்கும் வாய்ப்பை இழந்தார். எனினும், டெஸ்ட் அணியில் இவருக்கென ஒரு இடம் உண்டு. அடுத்த வருடத்தின் சிறந்த பேட்ஸ்மேனாக இவர் வருவார் என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மீண்டும் அம்பதி ராயுடு

மீண்டும் அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு ஏற்கனவே இந்திய அணியில் ஆடியவர். எனினும், பார்ம் காரணமாக அணியில் தன் வாய்ப்பை இழந்தார். நீண்ட நாட்கள் கழித்து ஐபிஎல்-இல் அதிரடி காட்டிய அவர், மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியில் நான்காம் இடத்தில் யார் களமிறங்குவது என்ற குழப்பம் நீடித்து வந்தது. அதற்கு சரியான தீர்வாக அமைந்தார் ராயுடு. அதனால், அவரது இடமும் அணியில் உறுதியாகி உள்ளது. இந்த ஆண்டின் சிறந்த "கம்பேக்" என்றால் அதி அம்பதி ராயுடு தான்.

Story first published: Monday, December 31, 2018, 16:10 [IST]
Other articles published on Dec 31, 2018
English summary
Year ender 2018 : Future Star Players like Rishab Pant, Mayank Agarwal, Prithvi shaw, Khaleel Ahmed were found in the year 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X