நீங்க ரொம்ப சிறப்பாக இருக்கீங்க.. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பிரீத்தி ஜிந்தா ஜில் மெசேஜ்

துபாய் : இன்னும் சில தினங்களில் ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா தற்போது துபாயில் குவாரன்டைனில் உள்ளார்.

வரும் 20ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தன்னுடைய முதல் போட்டியை விளையாடவுள்ளது.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா வீடியோ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் பொறுப்பேற்றுள்ளார். இதுவரை இந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லாத நிலையில், தங்களது முதல் கோப்பையை வெல்ல அணி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கென தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், க்ளென் மாக்ஸ்வெல், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், கருண் நாயர் உள்ளிட்ட வீரர்களும், முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல் மற்றும் முஜீப்-உர்-ரஹ்மான் உள்ளிட்ட பௌலர்களும் அணிக்கு சிறப்பு சேர்க்கும்வகையில் அமைந்துள்ளனர்.

ரெய்னா வேண்டாம்.. அந்த வீரரை வைத்து சமாளிச்சுக்கலாம்.. கழட்டி விட்ட தோனி.. சிஎஸ்கே அதிரடி திட்டம்!

இந்நிலையில் அணிவீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது துபாயில் குவாரன்டைனில் உள்ள அவர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் தொடர்ந்து வீரர்களின் கடுமையான பயிற்சிகளை சமூக வலைதளங்கள் மூலம் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Preity Zinta is currently quarantining in the UAE ahead of IPL 2020
Story first published: Wednesday, September 16, 2020, 13:13 [IST]
Other articles published on Sep 16, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X