For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4, 5, 6… கூட்டி, கழிச்சு கணக்கு போடும் அந்த இளம் வீரர்.. முட்டி மோதும் மற்ற இருவர்..! பரபர தகவல்

மும்பை: 4ம் வரிசையில் பேட்டிங் செய்வதை மிகவும் விரும்புவதாக இளம் வீரர் ரிஷப் பன்ட் கூறியிருக்கிறார்.

இந்திய அணியில் வீரர்கள் இருப்பு, உலக கோப்பை தொடருக்கு பின்னர் முற்றிலும் மாறி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான வீரர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் இந்திய அணியில் அவருக்கு இடமில்லை என்பது அதன் மூலம் உறுதியாகி விட்டது. எனவே அவரது 5ம் இடமும் நிரப்பப்பட வேண்டும்.

ஷமிக்கு விசா கொடுக்க முடியாது.. மறுத்த அமெரிக்கா.. கடிதம் எழுதிய பிசிசிஐ.. கசிந்த அதிர்ச்சித் தகவல்! ஷமிக்கு விசா கொடுக்க முடியாது.. மறுத்த அமெரிக்கா.. கடிதம் எழுதிய பிசிசிஐ.. கசிந்த அதிர்ச்சித் தகவல்!

வீரர்கள் வரிசை

வீரர்கள் வரிசை

உலக கோப்பையில் ஜொலிக்காத கேதர் ஜாதவிற்கும் இனிமேல் பெரிய வாய்ப்பிருக்காது என்று கூறலாம். எனவே 4,5 மற்றும் 6 என 3 வரிசைகளுக்கு வீரர்களை நிரப்பியாக வேண்டும்.

4 ஆண்டுகள் கடந்தன

4 ஆண்டுகள் கடந்தன

இந்த மிடில் ஆர்டர் சொதப்பல் தான்.. இந்திய அணியின் உலக கோப்பை சாம்பியன் கனவை காவு வாங்கியது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கடந்தும், சரியான மிடில் ஆர்டர் வீரர்களை கண்டறிவதில் அணி தேர்வாளர்கள் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர்.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

அண்மையில் முடிந்த உலக கோப்பை தொடக்கத்தில் ராகுல் தான் 4ம் வரிசையில் இறக்கப்பட்டார். ஆனால் தவான் காயத்தால் தொடரின் பாதியில் விலகியதால் ராகுல் தொடக்க வீரராக மாறினார். விஜய் சங்கர் 4ம் வரிசையில் இறக்கப்பட்டார்.

நீண்டகால தீர்வு

நீண்டகால தீர்வு

அவரும் காயத்தால் வெளியேறி, இந்திய அணிக்கு டாட்டா காண்பிக்க, இளம் வீரர் ரிஷப் பன்ட் 4ம் வரிசையில் இறக்கப்பட்டார். உலக கோப்பை அரை இறுதியுடன் வெளியேறிய நிலையில், மிடில் ஆர்டர் சிக்கலுக்கு நீண்டகால தீர்வை தேட வேண்டிய கட்டாயத்தில் இப்போதும் இந்திய அணி இருக்கிறது.

அணியில் சேர்ப்பு

அணியில் சேர்ப்பு

இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20க்கான அணியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப் பட்டனர்.

பங்கம் வருமோ?

பங்கம் வருமோ?

மனீசும், ஸ்ரேயாசும் அணியில் இணைந்துள்ளதால், எங்கே தனது 4ம் வரிசைக்கு பங்கம் வருமோ என்று இளம் வீரர் ரிஷப் பன்ட் நினைக்கிறார். அவரது செயல்களில் இருந்து இதுபோன்ற விஷயங்களை உணர முடிகிறது.

4ம் வரிசை பேட்டிங்

4ம் வரிசை பேட்டிங்

இது குறித்து ரிஷப் பன்ட் கூறியிருப்பதாவது: 4ம் வரிசையில் பேட்டிங் செய்வதை நான் மிகவும் விரும்புகிறேன். இது எனக்கு புதிதல்ல. ஐபிஎல்லில் கூட 4ம் வரிசையில் ஆடியிருக்கிறேன். அந்த வரிசைக்காகவே நான் தயாராகி இருக்கிறேன்.

பாணி கிடையாது

பாணி கிடையாது

எனக்கு என்று இப்படித் தான் ஆட வேண்டும் என்ற பாணி என்றெல்லாம் ஒன்று கிடையாது. சூழ்நிலை எப்படி உள்ளதோ அதற்கு ஏற்றபடி விளையாடுவேன். என்னை பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. ஏன் என்றால் நான் செய்தித்தாள்களை படிப்பது இல்லை என்றார்.

Story first published: Saturday, July 27, 2019, 10:30 [IST]
Other articles published on Jul 27, 2019
English summary
Young player Rishabh pant wants to play in 4th place.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X