For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆளே இல்லாத டீமை கூட ஜெயிக்க வைக்கும் ஒரே கேப்டன்.. அந்த லெஜண்டை புகழ்ந்து தள்ளிய பதான்.. அப்ப தோனி?

மும்பை : ஐபிஎல் தொடரில் யூசுப் பதான் நீண்ட காலம் ஆடினார். மூன்று அணிகளில் ஆடி உள்ளார்.

Recommended Video

இவர்தான் சிறந்த கேப்டன்... யூசுப் பதான் புகழ்ந்த முன்னாள் வீரர்

அவர் ஐபிஎல் கேப்டன்களில் சிறந்த கேப்டன் யார் என்பது பற்றி பேசும் போது ஷேன் வார்னேவை புகழ்ந்து தள்ளினார்.

பெரிய வீரர்கள் இல்லாத அணியைக் கூட ஐபிஎல் கோப்பை வெல்ல வைக்கும் திறமை பெற்ற கேப்டன் என தோனியை பலரும் புகழ்ந்து வரும் நிலையில், யூசுப் பதான் ஷேன் வார்னேவை குறிப்பிட்டுள்ளார்.

சச்சினின் ரகசிய ஆயுதம் இதுதான்.. 2011 உலகக்கோப்பையில் கிளம்பிய பரபரப்பு.. உண்மையை உடைத்த சச்சின்!சச்சினின் ரகசிய ஆயுதம் இதுதான்.. 2011 உலகக்கோப்பையில் கிளம்பிய பரபரப்பு.. உண்மையை உடைத்த சச்சின்!

ஆல் - ரவுண்டர் யூசுப் பதான்

ஆல் - ரவுண்டர் யூசுப் பதான்

யூசுப் பதான் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக கடந்த 2008 முதல் ஐபிஎல் அரங்கில் வலம் வந்தார். அவரது சகோதரர் இர்பான் பதான் அண்டர் 19 அணியில் இருந்து நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், யூசுப் பதான் ஐபிஎல் போட்டிகளை பிடித்துக் கொண்டார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

ஐபிஎல் தொடரில் தன் பார்மை நிரூபித்து, இந்திய அணியில் நுழைந்தார் யூசுப் பதான். இந்திய அணியில் பெரிய உயரங்களை தொடாமல் போனாலும் ஐபிஎல் அரங்கில் நம்பிக்கை அளிக்கும் வீரராக வலம் வந்தார். அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

37 பந்தில் சதம்

37 பந்தில் சதம்

2010இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய போது 37 பந்துகளில் அவர் அடித்த சதம் இன்றும் ஐபிஎல் அரங்கின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் அவர் 2008இல் ஷேன் வார்னே ஒரு சாதாரண அணியை ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்தார் என்பதை சுட்டிக் காட்டினார்.

2008 ஐபிஎல்-இல் ராஜஸ்தான்

2008 ஐபிஎல்-இல் ராஜஸ்தான்

2008 ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட போது மற்ற அணிகள் நட்சத்திர வீரர்களை வளைத்துப் போடுவதில் ஆர்வம் காட்டிய நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிறைய செலவு செய்ய யோசித்து சராசரியான வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது.

கேப்டன் ஷேன் வார்னே

கேப்டன் ஷேன் வார்னே

ஆனால், அவர்கள் ஏலத்தில் வாங்கியதிலேயே சிறந்த அனுபவ வீரர் ஷேன் வார்னே மட்டுமே. அவரையே கேப்டனாக நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அவர் அந்த சாதாரண அணியை வழிநடத்தி 2008இல் ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்தார்.

வார்னே சொல்லிக் கொடுப்பார்

வார்னே சொல்லிக் கொடுப்பார்

அதை நினைவு கூர்ந்த யூசுப் பதான், மூன்று ஆண்டுகள் ஷேன் வார்னேவுக்கு கீழ் ஆடினேன். அவர் போட்டிக்கு முன்பே பேட்ஸ்மேனை எப்படி வீழ்த்த வேண்டும் என வழி காட்டுவார். அதன் நாங்கள் செய்து அவர் கூறியது போலவே பேட்ஸ்மேனை வீழ்த்துவோம் என்றார்.

அவரால் தான் முடியும்

அவரால் தான் முடியும்

மேலும், பெரிய வீரர்கள் இல்லாத நிலையிலேயே அவர் எங்கள் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்று கோப்பை வெல்ல வைத்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ளூர் வீரர்கள் அதிகமாகவும், வெளிநாட்டு வீரர்கள் குறைவாகவும் இருந்தனர். குறைந்த வாய்ப்புகளை கொண்டு கோப்பை வெல்ல அவரைப் போன்ற கேப்டனால் தான் முடியும் எனக் கூறினார் யூசுப் பதான்.

சிறந்த கேப்டன் தோனி

சிறந்த கேப்டன் தோனி

ஐபிஎல் தொடரில் தோனி கடந்த 2018இல் அதிக வயதான வீரர்கள் அணியை வழிநடத்தி வென்ற போதும் இதே போன்ற பாராட்டு குவிந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதே வீரர்களை வைத்துக் கொண்டு அடுத்த ஆண்டும் இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே அணியை அழைத்துச் சென்றார் தோனி.

Story first published: Friday, May 1, 2020, 15:41 [IST]
Other articles published on May 1, 2020
English summary
Yusuf Pathan praises Shane Warne as best captain in IPL. He lead the Rajasthan Royals team to IPL final and won the trophy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X