For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திணேஷ் ஆடியிருக்கனும்... டெய்லர் டென்ஷனாகாமல் இருந்திருக்கனும்......!

ஷார்ஜா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரைத் தோற்கடிக்கக் கூடிய நல்ல வாய்ப்பை டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர் நேற்றுத் தவற விட்டு விட்டனர்.

பெங்களூர் அணியின் பேட்டிங்கில் ஏற்பட்டு விட்டு சிறு குழப்பத்தை இதற்குக் காரணமாக கூறலாம்.

திணேஷ் கார்த்திக் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனது, ஆடத் தொடங்கிய முரளி விஜய் அவுட்டாகிப் போனது, அடித்து ஆடிக் கொண்டிருந்த ராஸ் டெய்லர் டென்ஷனில் பந்துகளைச் சரியாக கணிக்காமல் கோட்டை விட்டது ஆகியவையே டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனதற்குக் காரணம்.

அதேசமயம், டுமினியும், ராஸ் டெய்லரும் சேர்ந்து பிரமாதமாக ஆடியதால்தான் டெல்லி அணி ஓரளவு பைட்டிங்கான ஸ்கோரை எட்ட முடிந்தது. ஆனால் என்ன செய்து, பெங்களூர் அணியில் யுவராஜ் சிங்கும், கோஹ்லியும் சேர்ந்து பொளந்து விட்டார்களே....

வாங்க ஹைலைட்ஸ் பார்ப்போம்....

பெரிய விலை.. சூப்பர் பார்ம்....

பெரிய விலை.. சூப்பர் பார்ம்....

பெங்களூர் அணியின் யுவராஜ் சிங் மிகப் பெரிய விலைக்கு இந்த ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ஆவார். எனவே அதை உணர்ந்து அவர் பொறுப்பாக ஆடினார். நல்ல பார்மையும் காட்டினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அவரும் கோஹ்லியும் சேர்ந்து அதிரடியாக ஆடியதால்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை தோற்கடிக்க முடிந்தது.

இருவரும் சேர்ந்து 84

இருவரும் சேர்ந்து 84

கேப்டன் கோஹ்லியும், யுவராஜும் சேர்ந்து 7.9 ஓவர்களில் 84 ரன்களைக் குவித்து விட்டனர்.

ஸ்டைலிஷ் யுவராஜ்

ஸ்டைலிஷ் யுவராஜ்

யுவராஜ் தனது பழைய ஸ்டைலுக்கு மாறி பந்துகளை அடித்து நொறுக்கியதை ரசிகர்களுடன் சேர்ந்து அவரே கூட ரசித்திருப்பார்.. காரணம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நன்றாக ஆடியதால்.

5 சிக்ஸர்... 3 போர்

5 சிக்ஸர்... 3 போர்

யுவராஜ் சிங் 29 பந்துகளைச் சந்தித்து 52 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களையும், 3 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.

ஆனால் முதலில் வெளுத்தது பார்த்திவ் படேல்தான்

ஆனால் முதலில் வெளுத்தது பார்த்திவ் படேல்தான்

இருப்பினும் டெல்லி பந்து வீச்சை சமாளித்து அணிக்கு ஸ்திரமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் பார்த்திவ் படேல்தான். 28 பந்துகளைச் சந்தித்த அவர் 37 ரன்களைச் சேர்த்தார். இதில் ஒரு சிக்ஸரும், 5 பவுண்டரிகளும் அடக்கம்.

20 பந்துகளை மிச்சம் வைத்து

20 பந்துகளை மிச்சம் வைத்து

பார்த்திவ், யுவராஜ், கோஹ்லி ஆகியோரின் நேர்த்தியான ஆட்டம் காரணமாக 20 பந்துகள் மீதமிருந்த நிலையில் பெங்களூர் அணி வெற்றிக் கனியை சுவைத்தது.

பாட்டுக் கேட்டபடி மேட்ச் பார்த்த கிங்பிஷர் மல்லையா

பாட்டுக் கேட்டபடி மேட்ச் பார்த்த கிங்பிஷர் மல்லையா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டபடி மேட்ச்சை ரசித்துப் பார்த்தார்.

2 தடவை தப்பிய கோஹ்லி

2 தடவை தப்பிய கோஹ்லி

கோஹ்லி 23 மற்றும் 24 ரன்களில் இருந்தபோது இரண்டு முறை கேட்ச் ஆகும் அபாயத்திலிருந்து தப்பினார்.

கெய்லுக்கு முதுகுவலியாம்

கெய்லுக்கு முதுகுவலியாம்

நேற்றைய போட்டியில் அதிரடிப் புயல் கெய்ல் இடம் பெறவில்லை. அவருக்கு முதுகு வலி வந்ததால் அவருக்குப் பதில் நிக் மேடின்சனை சேர்த்தனர். ஆனால் அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார்.

திணேஷ் கார்த்திக் அவுட் பின்னடைவு

திணேஷ் கார்த்திக் அவுட் பின்னடைவு

நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் திணேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் அவுட்டானது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது. திணேஷ் டக் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தில் புகுந்து கொண்டிருந்த முரளி விஜய் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டுமினி அபாரம்

டுமினி அபாரம்

இருப்பினும் ஜேபி டுமினி பிரமாதமாக ஆடி அணியின் கெளரவம் முற்றிலும் சரியாமல் தடுததார். அதிரடியாக ஆடிய அவர் 48 பந்துகளில் 67 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஏன் டெய்லருக்கு இவ்ளோ டென்ஷன்

ஏன் டெய்லருக்கு இவ்ளோ டென்ஷன்

நேற்று இவரைப் போலவே ராஸ் டெய்லரும் சிறப்பாக ஆடினார். ஆனால் திடீரென டென்ஷனாகி விட்டார். அதன் பிறகு அவர் சரியாக ஆடவில்லை. பந்துகளை சரியாக கவனிக்காமல் அவை தவறிப் போகவே, பேட்டால் பிட்சைக் குத்தினார். கத்தினார்.. அவரையே திட்டிக் கொண்டார். சற்று நிதானமாக இருந்து பந்தை சரியாக கணித்து அடித்து ஆடியிருந்தால் கூடுதலாக 20 ரன்களை அந்த அணி சேர்த்திருக்கலாம்.

Story first published: Friday, April 18, 2014, 10:26 [IST]
Other articles published on Apr 18, 2014
English summary
Yuvraj Singh struck form with a brilliant unbeaten half century as Royal Challengers Bangalore crushed Delhi Daredevils by eight wickets in their IPL campaign opener here last night. Yuvraj (52 not out) shared 84 runs from just 7.9 overs with captain Virat Kohli (49 not out) for the unconquered third wicket as RCB chased down the target of 146 with 20 balls to spare at the Sharjah Cricket Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X