For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிச்சைக்காரருக்கும் உணவளிக்கும் தர்மம்... காவல்துறையின் கண்கலங்க வைத்த செயல்பாடு

டெல்லி : நாடு முழுவதிலும் ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிச்சைக்காரர்கள் உள்ளிட்டோர் உணவின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நெருக்கடி நேரத்தில் சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருடன் காவல்துறையினரும் சிறப்பான செயல்பாட்டை அளித்து வருகின்றனர்.

உலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்கஉலக கோப்பைக்கு இன்னும் காலம் இருக்கு பாஸ்... இப்பவே பட்டாசை எல்லாம் தீர்த்துடாதீங்க

Yuvraj Singh Praises Policemen For Sharing Their Own Food

இந்நிலையில், பிச்சைக்காரர் ஒருவருக்கு, தங்களுடைய உணவை அளித்து அவரை நிதானமாக சாப்பிடும்படி அறிவுறுத்திய காவல்துறை நண்பர்களின் செயல்பாடு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழல் இந்தியாவிலும் உள்ள நிலையில், இங்கு உயிரிழப்பு நூறை தாண்டி சென்றுள்ளது. மேலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நெருக்கடி நிலையில், தன்னலம் பார்க்காமல், செயல்பட்டு வரும் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு நாடுமுழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவர்களின் செயல்பாட்டை பாராட்டும்வகையில் நேற்றிரவு பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் வீட்டின் விளக்குகளை அமர்த்திவிட்டு வாசல்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

இந்நிலையில், இந்த நெருக்கடி நேரத்தில் பசியால் வாடிய பிச்சைக்காரர் ஒருவருக்கு தங்களது உணவை அளித்த காவல்துறையினரின் செயல்பாடு, சமூகவலைதளங்களில் வீடியோவாக பகிரப்பட்டு, அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. தங்களது உணவை அந்த பிச்சைக்காரருக்கு வழங்கிய அந்த காவலர்கள், தண்ணீர் அளித்து, நிதானமாக சாப்பிடும்படி கூறுகின்றனர்.

இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய முன்னாள் ஆட்டக்காரர் யுவராஜ் சிங், அவர்களின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, April 6, 2020, 12:41 [IST]
Other articles published on Apr 6, 2020
English summary
Yuvraj heaped praise on a group of Policemen for "Sharing their own Food"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X