For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20யில் அவுட் ஆகாமல் வெளியேறிய யுவராஜ் சிங்.. இது தான் காரணமா? ஷாக்கான ரசிகர்கள்!

Recommended Video

Global T20 Canada : Yuvaraj : அவுட் ஆகாமல் வெளியேறிய யுவராஜ் சிங்..ஷாக்கான ரசிகர்கள்!- காரணம் என்ன?

ஒண்டாரியோ : கனடாவின் குளோபல் டி20 தொடரில் யுவராஜ் சிங் அவுட் ஆகாமலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறியது அதிர்ச்சியான சம்பவமாக அமைந்தது.

கனடாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடரில் பங்கேற்றுள்ளார் யுவராஜ் சிங். கடைசியாக 2019 ஐபிஎல் தொடரில் ஆடிய யுவராஜ் சிங், உலகக்கோப்பை நடந்து கொண்டு இருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கேப்டன் யுவராஜ் சிங்

கேப்டன் யுவராஜ் சிங்

அடுத்து குளோபல் டி20 தொடரில் ஆட அனுமதி கேட்டிருந்தார். பிசிசிஐ அனுமதி அளித்த நிலையில், யுவராஜ் சிங் அந்த தொடரில் டொரன்டோ நேஷனல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த தொடரின் முதல் போட்டியில் டொரன்டோ நேஷனல்ஸ் - வான்கூவர் நைட்ஸ் அணிகள் மோதின. வான்கூவர் அணியின் கேப்டன் கிறிஸ் கெயில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மெக்குல்லம் திணறல்

மெக்குல்லம் திணறல்

துவக்க வீரர் பிரென்டன் மெக்குல்லம் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து மெக்ளியாட் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். நான்கவது வீரராக களமிறங்கிய யுவராஜ் சிங் பேட்டிங் செய்ய முடியாமல் திணறினார்.

ஸ்டம்பிங்

ஸ்டம்பிங்

17வது ஓவரில் சீமா வீசிய பந்தை யுவராஜ் சிங் அடிக்க முயன்றார். ஆனால், பந்தை தவறவிட்டார். பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்ய முயன்றார். அப்போது யுவராஜ் சிங் கால்கள் கிரீஸுக்குள் தான் இருந்தது.

வெளியேறினார்

அம்பயர் அது அவுட் தானா? என சிந்தித்துக் கொண்டு இருந்த போதே களத்தை விட்டு வெளியேறினார் யுவராஜ் சிங். அப்போது 27 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரால் சுத்தமாக பந்தை அடிக்க முடியவில்லை.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அவுட் ஆகாமல் ஏன் யுவராஜ் சிங் வெளியேறினார்? என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு சிலர் சொல்லப்படும் காரணம், சர்ச்சைக்குரிய வகையில் உள்ளது. யுவராஜ் சிங் சரியாக பேட்டிங் செய்ய முடியாத நிலையில், அடுத்து இருந்த அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு வழி விட்டு அவுட் ஆகாமலேயே வெளியேறி விட்டார் என்கிறார்கள்.

அணி தோல்வி

அணி தோல்வி

யுவராஜ் சென்ற பின் கீரான் பொல்லார்டு, ஹெயின்ரிச் இணைந்து அதிரடியாக ஆடி அணியை மீட்டனர். 20 ஓவர்களில் டொரன்டோ நேஷனல்ஸ் அணி 159 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வான்கூவர் நைட்ஸ் 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

Story first published: Friday, July 26, 2019, 12:36 [IST]
Other articles published on Jul 26, 2019
English summary
Yuvraj Singh wicket in Golbal T20 Canada became a controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X