யார்கிட்ட பந்தயம்.. குறிபார்த்து அடித்த சாஹல்.. கோட்டை விட்ட குல்தீப்.. இப்படி ஒரு போட்டியா!

WORLD CUP 2019 | குறிபார்த்து அடித்த சாஹல், கோட்டை விட்ட குல்தீப்

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி ஸ்பின் பவுலர்களுக்கு இடையில் சுவராஸ்யமான போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தபோட்டியில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால் குல்தீப் 55 ரன்கள் விட்டுக்கொடுத்துவிட்டு ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதேநேரம் சாஹல் முதல் இரண்டு போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பவுலராக வலம் வருகிறார்.

எப்போது போட்டி

எப்போது போட்டி

இந்திய அணி வரும் ஜுன் 13ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டியில் ஆடும் லெவன் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இடம்பெறுவார் என தெரிகிறது. இந்த போட்டி நடக்கும் நாட்டிங்ஹாம் மைதானத்தில் 15 டிகிரி அளவுக்கு குளிர் இருக்கும் என கூறப்படுகிறது. இதேபோல் அன்றைக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன போட்டி

என்ன போட்டி

இந்த போட்டி நடக்க உள்ள மைதானத்தில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடப்போகும் சாஹலும், குல்தீப்புக்கும் இடையே இந்திய கிரிக்கெட் அணியின் ஃபில்டிங் பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் ஸ்ரீதர் வேடிக்கையான பயிற்சி போட்டி ஒன்றை வைத்தார். இதுதான் தற்போது வைரலாகி உள்ளது.

எப்படி செய்ய வேண்டும்

எப்படி செய்ய வேண்டும்

இதன்படி தூரத்தில் இருந்தபடி ஸ்டெம்பை குறிபார்த்து பந்து வீசாத கை மூலம் இருவரும் எரிய வேண்டும். குல்தீப் இடதுகை ஸ்பின் பவுலர். இதனால் அவர் வலது கையில் பந்தை வீச வேண்டும். சாஹல் வலது கை ஸ்பின் பவுலர் என்பதால் அவர் இடது கையில் பந்தை வீச வேண்டும். பீல்டிங் திறனை மேம்படுத்த இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

சூப்பர் பாஸ்

இதில் சாஹல் முதல் முயற்சியில் தோற்றாலும் இரண்டாவது முயற்சியில் சரியாக எறிந்தார். ஆனால் குல்தீப் யாதவ், பலமுறை முயற்சி செய்த பிறகே குறிபார்த்து ஸ்டெம்பை எறிந்தார். இந்த வேடிக்கையான வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் தனது சமூக வலைதள பக்கத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மாஸ் பாஸ்

மாஸ் பாஸ்

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த மாதிரி பந்துபோட்ட குல்தீவ் வேஸ்ட் அவருக்கு பயிற்சி போதவில்லை. இந்த மாதிரி தவறான கையில் பந்து போட்டால் அது தற்கொலை முயற்சி என்றும் கிண்டல் அடித்துள்ளனர். அதேநேரம் சாஹலை பலரும் பாராட்டி உள்ளார்கள். சஹாலை சிறப்பாக பந்து வீசியதாக பாராட்டினார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Yuzvendra Chahal beats Kuldeep Yadav in hitting the stumps with their non-bowling arm - Video.
Story first published: Tuesday, June 11, 2019, 13:29 [IST]
Other articles published on Jun 11, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X