டோணி எட்டடி பாய்ந்தால், குட்டி ஜிவா 16 அடி பாய்கிறாள்

Posted By: Staff

கேப்டன் கூல் மகேந்திர சிங் டோனி, கிரிக்கெட் மைதானத்தில் கலக்கி கொண்டிருக்கும்போது, அவருடைய இரண்டு வயது மகள் ஜிவா சமூக வளைதலங்களில் கலக்கோ கலக்கு என்று கலக்கி கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் மழலைக் குரலில், மலையாள பாடலை ஜிவா பாடியதைக் கேட்டு சமூகதளத்தில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் கொடுத்ததெல்லாம் ஜூஜூபி. அந்த கடினமான பாடலை பாடிய ஜிவாவை, கோவிலுக்கு அழைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தல மகேந்திர சிங் டோணி, சமீப காலமாக மைதானத்தில் பூந்து விளையாடி கொண்டிருக்கிறார்.

ஹிட் அடிக்கும் டோணி மகள்

ஹிட் அடிக்கும் டோணி மகள்

இந்த நிலையில், இரண்டு வயதாகும் அவருடைய மகள் ஜிவா, சமூக தளங்களில் ரவுண்டி கட்டி விளையாடி வருகிறார். டோணியுடன் லட்டு சாப்பிடுவது, கால்பந்து போட்டியின்போது டோணிக்கு தண்ணீர் கொடுப்பது, தன்னுடைய நண்பர் கேப்டன் விராட் கோஹ்லியுடன் சரளமாக பேசுவது என்று, ஜிவா உள்ள அனைத்து வீடியோக்களும் ஹிட் ரகங்கள்.

லைக்குகளை அள்ளிய வீடியோ

இதில், கடைசியாக வந்தது, மலையாள படத்தில் வந்த ஒரு பாடலை, மழலைக் குரலில், மிகச் சரளமாக அவர் பாடியதுததான். அம்பலப்புழா உன்னி கண்ணனோடு நீ, எந்து பரிபவம்....' என்ற பாடலை ஜியா பாடி வீடியோ வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே லைக்குகள், சர்க்கரை விலையை தமிழக அரசு உயர்த்தியைப் போல, விறுவிறுவென்று உயர்ந்தது.

கடினமான பாடலை பாடி அசத்தினார்

கடினமான பாடலை பாடி அசத்தினார்

மோகன்லால், ஜெய்ராம் நடித்து வெளியான அத்வைதம் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை பிரபல பின்னணி பாடகர், எம்.பி.ஸ்ரீகுமார் பாடியியிருந்தார். மலையாளம் தெரிந்தவர்களே மிகவும் கடினமான அந்தப் பாடலை, ஒரு குட்டிக் குழந்தை பாடியது, கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டில் உள்ளவர்களுக்கு மெய்சிலிர்க்க வைத்தது.

சிறப்பு விருந்தாளியாகிறார் ஜிவா

சிறப்பு விருந்தாளியாகிறார் ஜிவா

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, உன்னிகிருஷ்ணன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள கிருஷ்ணனை குறிக்கும் வகையில் அமைந்துள்ள அந்தப் பாடலை பாடிய ஜிவாவை கவுரவிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரியில் நடக்கும் கோவிலின் முக்கிய நிகழ்ச்சிக்கு ஜிவாவை சிறப்பு விருந்தாளியாக அழைக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

Story first published: Saturday, October 28, 2017, 16:26 [IST]
Other articles published on Oct 28, 2017
Please Wait while comments are loading...