For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"ஒன் லாஸ்ட் டான்ஸ்" கனவை எட்டிப்பிடிக்க முயற்சிக்கிறேன்.. காயம் பற்றி தெளிவாக பதில் அளித்த மெஸ்ஸி!

தோஹா: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கடைசி முறையாக பங்கேற்பது குறித்து அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி மனம் திறந்துள்ளார்.

கத்தார் உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்னதாக மெஸ்ஸி பற்றி பேச்சுகள் ரசிகர்களிடையே அதிகரித்தது. மெஸ்ஸி-க்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்பதால், அவர் தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் தங்களது ஆசையை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் இன்று மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா சவுதி அரேபியா அணியை எதிர்த்து இன்று விளையாட உள்ளது. இதனை முன்னிட்டு நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி செய்தியாளர்களை சந்தித்தார்.

செம்ம டைமிங்.. நெருப்பை பற்றவைத்த ரொனால்டோ, மெஸ்ஸி.. ஃபிபா உலகக்கோப்பைக்கு எகிறிய எதிர்பார்ப்பு!செம்ம டைமிங்.. நெருப்பை பற்றவைத்த ரொனால்டோ, மெஸ்ஸி.. ஃபிபா உலகக்கோப்பைக்கு எகிறிய எதிர்பார்ப்பு!

மெஸ்ஸி பேட்டி

மெஸ்ஸி பேட்டி

அப்போது அவர் கூறுகையில், எனக்கு எந்த காயமோ, பிரச்சினையோ இல்லை. தனியாக பயிற்சியை மேற்கொண்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கையே. ஒவ்வொரு முக்கிய தொடர்கள் தொடங்கும் போதும் என்னைப் பற்றிய இப்படியான செய்திகள் வெளியாவது வழக்கம்தான். பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் அர்ஜென்டினா அணி வெற்றிபெற வேண்டும் என்று ஆதரவு அளித்து வருகின்றனர்.

கடைசி முயற்சி

கடைசி முயற்சி

இந்த உலகக்கோப்பைத் தொடர் கொஞ்சம் ஸ்பெஷல். கடைசி தடவையாக கனவை எட்டி பிடிக்கும் முயற்சி. இந்த பயணத்தை எண்ணி மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை வரையிலான பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார். இதுவரை 1930, 1978, 1986, 1990 மற்றும் 2014 என 5 முறை உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா விளையாடி உள்ளது. அதில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

அதுமட்டுமல்லாமல் லயோனல் மெஸ்ஸி, இதுவே தனது உலகக்கோப்பை என்று கூறியுள்ளதால், அவரின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கால்பந்து ஜாம்பவான் மரடோனா இரு ஆண்டுகளுக்கு முன் மறைந்துள்ளதால், கோப்பையை வென்று அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அர்ஜென்டினா ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அர்ஜென்டினாவின் பலம்

அர்ஜென்டினாவின் பலம்

அதுமட்டுமல்லாமல் அர்ஜென்டினா அணி இளமையும், அனுபவமும் வாய்ந்த அணியாக வலம் வருகிறது. கோல்கீப்பர் எமிலியனோ அணி முக்கிய தூணாக திகழ்ந்து வருகிறார். அதேபோல் தடுப்பாட்டத்தில் ரோமரியோ, லிசன்ரோ, இருக்கிறார்கள். நடுக்களத்தில் பரடெஸ், கோமஸ், ரோடிகுஷ், பலசியோஸ், பெர்னாண்டஸ் உள்ளார்கள். அதேபோல் மிக முக்கிய பலமாக அட்டாக்கில் டி மரியா, ஆல்வெரஸ், பாலோ டை பாலா இருக்கிறார்கள். இவர்களுடன் மெஸ்ஸி இருப்பதால், அர்ஜென்டினா அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 22, 2022, 7:03 [IST]
Other articles published on Nov 22, 2022
English summary
Argentina captain Messi has opened up about his last appearance at the FIFA World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X