For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

என்ன செய்யப்போகிறது பிரேசில்? காயமடைந்த நெய்மார்.. அடுத்தப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்!

தோஹா: பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் காயம் காரணமாக சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் முதல் போட்டியை விளையாடி முடித்துள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்று நள்ளிரவில் நடைபெற்ற போட்டியில் செர்பியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி அபார வீழ்த்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. குறிப்பாக ரிச்சர்லிசனின் பை சைக்கிள் கிக் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

பிரேசில் அணி

பிரேசில் அணி

அதேபோல் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், அந்த அணி முதல் கோல் அடிக்க செய்த அசிஸ்ட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. உலகக்கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ள அணிகளுள் ஒன்றான பிரேசில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நெய்மாரும் சிறந்த ஃபார்மில் இருப்பதால், பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நெய்மார் காயம்

நெய்மார் காயம்

இந்த நிலையில் செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசிலின் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மார் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செர்பியா அணிக்கு எதிரான போட்டியின் 79வது நிமிடத்தில், எதிரணியின் தடுப்பை தகர்த்து நெய்மார் பந்தை கடத்தி சென்றார். அப்போது எதிரணி வீரர் பந்தை பறிக்க முயன்றபோது, நெய்மார் கால் இடறி கீழே விழுந்தார்.

கண்ணீர் விட்ட நெய்மார்

கண்ணீர் விட்ட நெய்மார்

இதில் நெய்மாருக்கு கணுக்காலில் ஏற்பட்ட வலியால் மைதானத்திலேயே துடித்தார். இதன்பின்னர் பிரேசில் அணியின் மருத்துவர் மைதானத்திற்கு வந்து நெய்மாரை பரிசோதனை செய்தனர். இதன் பின்னர் நெய்மார் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார். அதேபோல் மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த போது, அவரது கண்கள் கலங்கி இருந்தன. இதனால் அடுத்தப் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.

மருத்துவர்கள் சொல்வது என்ன?

மருத்துவர்கள் சொல்வது என்ன?

இது தொடர்பாக பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் கூறுகையில், நெய்மாரின் காயத்தின் தன்மை குறித்து முழுமையாக அறிய நாங்கள் 24 முதல் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. விரைவில் காயம் குறித்து முழுமையான தகவல்களை பெறுவோம் என்று தெரிவித்தார்.

பயிற்சியாளர் கருத்து

பயிற்சியாளர் கருத்து

அதேபோல் பயிற்சியாளர் டைட் கூறுகையில், நெய்மார் உலக கோப்பையில் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை ரசிகர்கள் உறுதியாக நம்பலாம். அவரை விளையாட வைப்பதே எங்களின் குறிக்கோள் என்று தெரிவித்தார்.

Story first published: Friday, November 25, 2022, 21:57 [IST]
Other articles published on Nov 25, 2022
English summary
It has been reported that Brazil star Neymar will not play in the match against Switzerland due to injury.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X