For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - தக்க வைக்குமா ஜெர்மனி!

பிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி குறித்த விரிவான அலசல்.

Recommended Video

உலகக் கோப்பை...தக்க வைக்குமா ஜெர்மனி!- வீடியோ

சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

can Germany defend the title in the fifa world cup

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.

நாடு : ஜெர்மனி
எப் பிரிவில் மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா உடன் இடம்பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 17ல் மெக்சிகோ
ஜூன் 23ல் ஸ்வீடன்
ஜூன் 27ல் தென்கொரியா

பிபா தரவரிசை : 1

கடந்த உலகக் கோப்பையில் : சாம்பியன்

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1954, 1974, 1990, 2014ல் சாம்பியன்

முக்கிய வீரர்கள் : தாமஸ் முல்லர், ஜோஷுவா கிமிமிச், டோனி கிராஸ், மேசட் ஒசில், மார்க் ஆந்தரே டெர் ஸ்டீகன், மேட்ஸ் ஹம்மல்ஸ், ஜெரோம் போடங்க், மேனுவல் நேயர், லோரோ சானே

கோச்: ஜோதிம் லியூ

பிபா தரவரிசையில் நம்பர் 1 இடம், நடப்பு உலகக் கோப்பை சாம்பியன், மிகவும் வலிமையான அணி, அதிக அளவு சூப்பர் வீரர்களை கொண்ட நாடு என்று பல்வேறு தகுதிகளுடன் ஜெர்மனி களமிறங்குகிறது.

இந்த உலகக் கோப்பைக்காக நடந்த தகுதிச் சுற்றில் 10 ஆட்டங்களிலும் வென்றது. 2017ல் கான்படரேஷன் கோப்பையை வென்றது என்று தனது வலிமையை ஜெர்மனி கூட்டிக் கொண்டே வந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கோச்சாக உள்ள லியூவின் வியூகங்கள், பயிற்சிகள், ஒரு டீம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஜெர்மனி உள்ளது.

கடந்த உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த பலரும் இந்த உலகக் கோப்பையிலும் விளையாடுகின்றனர். முல்லர், கிராஸ் என கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகங்கள் இந்த அணியில் அதிகம் உள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டங்களில் ஜெர்மனி தோல்வியடைந்தது. அதனால், ஜெர்மனி மீண்டும் கோப்பையை வெல்லுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிவு சுற்று ஆட்டங்கள் அனைத்திலும் ஜெர்மனி வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. மெக்சிகோவுக்கு எதிரான முதல் ஆட்டமே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சி ஆட்டங்களில் அடைந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்றால், கோப்பையை தக்க வைக்க ஜெர்மனிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Tuesday, June 5, 2018, 11:40 [IST]
Other articles published on Jun 5, 2018
English summary
Will germany retain the fifa world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X