For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வரலாறு படைத்தது சிலி.. வாங்கிக் கட்டிக் கொண்டது அர்ஜென்டினா.. கோபா அமெரிக்காவில் கலக்கல் ரிசல்ட்!

சாண்டியாகோ: கோபா அமெரிக்கா சாம்பியன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக அர்ஜென்டினா செமையாக அடி வாங்கி தோல்வியைத் தழுவியது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-1 என்ற கோல் கணக்கில் சிலி பட்டத்தைத் தட்டிச் சென்று வரலாறு படைத்தது.

99 வருட கால கோபா அமெரிக்கா வரலாற்றில் இதுவரை சிலி சாம்பியன் பட்டத்தை வென்றதே கிடையாது. இந்த நிலையில் முதல் முறையாக அது சாம்பியன் ஆகியுள்ளது. அதுவும் தனது நாட்டில் வைத்து வரலாறு படைத்து சிலி மக்களை குஷியில் சிலிர்க்க வைத்து விட்டது.

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்து போனது. மெஸ்ஸி உள்ளிட்டோரை அர்ஜென்டினா ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சிலியின் வெற்றி கோலை அலெக்சிஸ் சான்செஸ் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

கோல்களே இல்லாமல் முடிந்த முழு நேரம்

கோல்களே இல்லாமல் முடிந்த முழு நேரம்

முன்னதாக முழு நேர ஆட்டம் கோல்களே இல்லாமல் முடிந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டது. அதிலும் கோல் விழவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் தரப்பட்டது.

4 - 1

4 - 1

இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிலி வீரர்கள் அசத்தி விட்டனர். 4 கோல்களை அவர்கள் கொளுத்த, அர்ஜென்டினா பதட்டத்தில் தவறி ஒரு கோல் மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது.

22 வருடமாக சாம்பியனாக தடுமாறும் அர்ஜென்டினா

22 வருடமாக சாம்பியனாக தடுமாறும் அர்ஜென்டினா

ஜாம்பவான் அணியான அர்ஜென்டினா கடந்த 22 வருடமாக எந்த முக்கிய சர்வதேச பட்டத்தையும் பெறாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டுள்ளது. இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மெஸ்ஸி தலைமையிலான அணியினருக்குக் கிடைத்தது ஏமாற்றம்தான்.

சிலிக்கு முதல் வெற்றி

சிலிக்கு முதல் வெற்றி

அதேசமயம், நேற்றைய வெற்றி சிலிக்கு மேலும் ஒரு சிறப்பையும் தேடிக் கொடுத்தது. கோபா அமெரிக்காவில் அது இதுவரை அர்ஜென்டினாவை தோற்கடித்தது இல்லை. அதை நேற்று சரி செய்து விட்டது. அர்ஜென்டினாவை முதல் முறையாக கோபாவில் சிலி வீழ்த்தியது அந்த நாட்டு ரசிகர்களுக்கு பேருவகையை கொடுத்துள்ளது.

மெஸ்ஸிக்கு ராசியே இல்லை

மெஸ்ஸிக்கு ராசியே இல்லை

என்னதான் ஜாம்பவான் என்றாலும் கூட மெஸ்ஸிக்கும், அர்ஜென்டினா அணிக்கும் ராசியே கிடையாது. அதாவது அர்ஜென்டினாவுக்கு அவர் பெரிய வெற்றியை இதுவரைத் தேடித் தந்ததில்லை. அதிக அளவில் கோல் அடித்ததும் கிடையாது. கிளப்களில் ஆடும் அளவுக்கு அவர் அர்ஜென்டினாவுக்காக அதிக அளவில் அசத்தியது இல்லை.

மொத்தத்தில் உலகக் கோப்பையில் ஜெர்மனியிடம் வாங்கிய அதிர்ச்சி அடிக்கு அடுத்து இப்போது சிலியிடிம் சிக்கி வெளியேறியுள்ளது அர்ஜென்டினா.

Story first published: Sunday, July 5, 2015, 11:30 [IST]
Other articles published on Jul 5, 2015
English summary
Chile stunned giant Argentina 4-1 on penalties in a high voltage match for their first international title in Copa America 2015.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X