காலையில் தினமும் கை தொழும் தேவதை அம்மா.. ரொனால்டோவின் பாசத்தைப் பார்த்தீங்களா

லிஸ்பன்: தாய் என்றால் தெய்வம்தான்.. அதில் என்ன மாற்றுக் கருத்து வந்து விடப் போகிறது. கருவறையில் பத்து மாதம் தாங்கி பெற்றெடுக்கும் பிள்ளைகள் மீது அன்பைச் சொறிவதில் தாய்க்கு நிகராக எதுவுமே கிடையாது.

அப்படிப்பட்ட தாயை போற்றிப் பாதுகாப்பதில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு நிகரே கிடையாது. மனிதர் தனது தாயை அப்படி தாங்கித் தாங்கிப் பார்த்துக் கொள்கிறார். பாசத்தில் நம்மை விட மிஞ்சிட்டானே என்று வடிவேலு படத்தில் வருமே வசனம்.. அது நிச்சயம் ரொனால்டோவுக்குப் பொருந்தும்.

காரணம், அம்மான்னா அவருக்கு அப்படி உயிர். இப்பக் கூட பாருங்க , போர்ச்சுகல் நாட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அதையொட்டி தனது அம்மாவுக்கு விலை உயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கிக் கொடுத்து அம்மா மனசை பூரிப்படைய வைத்துள்ளார். பிள்ளைன்னா இதுதான் பிள்ளை.

ரொனால்டோவின் அம்மா

ரொனால்டோவின் அம்மா

ரொனால்டோவின் தாய் பெயர் மரியா டோலரஸ். மே 3ம் தேதி அன்னையர் தினம் போர்ச்சுகல் நாட்டில் கொண்டாடப்பட்டது. இதை தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார் ரொனால்டோ. அப்போதுதான் தனது தாய்க்கு காரைப் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.

அம்மா மீது பாசம்

அம்மா மீது பாசம்

ரொனால்டோவின் தாய்க்கு பக்கவாதம் வந்து சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை ரொனால்டோ அருகே இருந்து கவனித்துக் கொண்டார். தற்போதுதான் அவர் வீடு திரும்பியுள்ளார். தனது மகன் காட்டிய அன்புக்கு நன்றி சொல்வதாக 65 வயதான மரியா டோலரஸ் தெரிவித்துள்ளார். ரொனால்டோ மட்டுமல்லாமல் அவரது சகோதர, சகோதரிகள் நான்கு பேரும் இணைந்து இந்த பரிசைக் கொடுத்துள்ளனர்.

தாய்க்குப் பின் தாரம்தானே

தாய்க்குப் பின் தாரம்தானே

தாய்க்குப் பின் தாரம்தானே.. அதையும் மறக்கலை ரொனால்டோ. தனது மனைவி ஜார்ஜினாவுக்கும் கிப்ட் கொடுத்து வாழ்த்து சொல்லி எனது இரு சூப்பர் பவர் பெண்கள் என்று புகழ்ந்துள்ளார். வழக்கமாக பல நாடுகளில் மார்ச் மாதம்தான் அன்னையர் தினம் கொண்டாடப்படும். ஆனால் போர்ச்சுகல் நாட்டில் மட்டும் மே முதல் ஞாயிறுதான் கொண்டாடப்படுவது வழக்கம்.

நல்ல உள்ளக்காரர் ரொனால்டோ

நல்ல உள்ளக்காரர் ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது தனது குடும்பத்தினருடன் லாக்டவுன் பீரியடை கழித்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு ஏராளமான உதவிகளை அவர் செய்துள்ளார். மீண்டும் கால்பந்து விளையாட ஆவலுடன் காத்துள்ளார். வீட்டிலேயே பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட தனது குழந்தைகளுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Portugal soccer star Cristiano Ronaldo gifted her mother a car on Mother's day
Story first published: Tuesday, May 5, 2020, 14:34 [IST]
Other articles published on May 5, 2020
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X