For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உன் கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா.. பரிதாப பிரேசில்!

பெங்களூரு: உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் ஜாம்பவான் அணிகளுக்கு தற்போது நேரம் சரியில்லை போலும். அர்ஜென்டினா டிரா செய்தது. இப்போது பிரேசிலும் டிரா செய்துள்ளது. இருவரும் சாதாரண அணிகளிடம் போய் பம்மியுள்ளதுதான் ரசிகர்களை கடுப்படைய வைத்துள்ளது.

பிரேசில் என்றால் எப்படி ஆட வேண்டுமோ அப்படி அந்த அணி நேற்று சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. மாறாக ஆரம்பத்தில் காட்டிய விறுவிறுப்பை இறுதிக் கட்டத்தில் கோட்டை விட்டது பிரேசில்.

இ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியுடனான ஆட்டத்தில் 1-1 என முன்னாள் சாம்பியன் பிரேசில் டிரா செய்தது. அர்ஜென்டினாவின் மெஸ்ஸியைத் தொடர்ந்து பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

நெய்மார் இருந்தும் கூட பிரேசிலால் வெல்ல முடியாமல் போனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நெய்மார் ஒரு கோல் கூட அடிக்காமல் போனது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மெஸ்ஸியைப் போலவே நெய்மாரும் ஏமாற்றி விட்டார். நேற்றைய போட்டி குறித்த ஒரு அலசல்.

நெய்மார் சறுக்கினார்

நெய்மார் சறுக்கினார்

காயத்திலிருந்து குணமடைந்து உலகக் கோப்பைக்கு வந்துள்ளார் நெய்மார். ஆஸ்திரியா, குரோஷியாவுக்கு எதிரான நட்புறவுப் போட்டிகளில் அவர் கோலடித்திருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் அவரை அழகாக சமாளித்தது சுவிட்சர்லாந்து. அவர்களின் முற்றுகையை நெய்மாரால் தகர்க்க முடியாமல் போனது ஆச்சரியம்தான். நெய்மார் சுதாரிக்காவிட்டால் நஷ்டம் பிரேசிலுக்குத்தான்.

ஜீசஸும் கைவிட்டார்

ஜீசஸும் கைவிட்டார்

அதேபோல இன்னொரு முக்கிய வீரர் ஜீசஸ். இவரும் நேற்று சொதப்பினார். தனது தி்றமைக்கேற்ப இவர் ஆடவில்லை. கோலடிக்க முயற்சிக்கக் கூட இல்லை. நேற்றைய போட்டியில் இந்த இரு வீரர்களும் சொதப்பியதால் பிரேசில் பெரும் நஷ்டப்பட்டு விட்டது.

சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனம்

பிரேசில் நேற்று தனது முதல் கோலைப் போட்ட வேகத்தில் அடுத்தடுத்து அதிரடி காட்டியிருந்தால் சுவிட்சர்லாந்தை எளிதாக சுளுக்கெடுத்திருக்கலாம். ஆனால் 19 வது நிமிடத்தில் அதி வேகமாக கோல் போட்டதோடு அது சுணங்கிப் போய் விட்டது. இது பிரேசில் வெல்லமுடியாமல் போனதற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

பினிஷிங் சரியில்லையேப்பா

பினிஷிங் சரியில்லையேப்பா

நெய்மார், ஜீசஸ், கோடின்ஹோ என ஸ்டார்கள் இருந்தும் கூட சிறப்பான முறையில் ஆட்டத்தை முடிக்காமல் பிரேசில் சொதப்பியது ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. குறிப்பாக சுவிட்சர்லாந்தின் டிபன்ஸை உடைக்க முடியவில்லை பிரேசிலால். இது ஒட்டுமொத்தமாக பிரேசில் அணியின் தோல்வியாகும். நெய்மார், கோடின்ஹோ சில நேரங்களில் மிரட்டலாக ஆடினாலும் கூட பாலின்ஹோ, பிர்மின்ஹோ, மிராண்டா, பெர்னாடின்ஹோ ஆகியோர் சரியான முறையில் வாய்ப்புகளைப் பயன்படுத்தவில்லை. இதனால்தான் பிரேசிலால் சரியான முடிவைப் பெற முடியாமல் போனது.

அபாரமான கோடின்ஹோ

அபாரமான கோடின்ஹோ

கோடின்ஹோ மட்டுமே நேற்றைய ஆட்டத்தில் பிரேசிலுக்கு உற்சாகம் கொடுத்தார். மிகத் திறமையாக ஆடிய அவர் எதிரணியினரை சற்றேனும் மிரட்டினார். இவர் போட்ட கோலும் கூட நேற்று பார்க்க கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் பிரேசிலின் பிரமிப்பு மங்கிப் போய் விட்டது.

 பாராட்டுக்குரிய சுவிட்சர்லாந்து

பாராட்டுக்குரிய சுவிட்சர்லாந்து

அதேசமயம், சுவிட்சர்லாந்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது. பிரேசிலை எழுந்திருக்க விடாமல் தடுத்து வைத்து தப்பியதே பெரிய விஷயம்தான். அதிலும் நெய்மார் போன்ற மின்னல் வீரர்களை மிரட்ட விடாமல் அமுக்கி ஓரங்கட்டிய சுவிட்சர்லாந்து வெகுவாக பாராட்டப்பட வேண்டியதாகும். ஒரு கட்டத்தில் கூட சுவிஸ் அணி சோர்ந்து போகவில்லை. அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அம்சமாகும். உண்மையைச் சொல்வதானால், பிரேசிலை விட அதிக நேரம் பந்து சுவிட்சர்லாந்து வீரர்கள் வசம்தான் இருந்தது.

Story first published: Monday, June 18, 2018, 13:24 [IST]
Other articles published on Jun 18, 2018
English summary
The brilliant Brazil that everyone want to see were missing for large part from the park against Switzerland on Sunday (June 17) during a Group E clash. What we had was a team sparkled only in isolation but on the other hand Switzerland was nippy and made Brazil pay heavily for their slouch-coach game.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X