For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கடைசி நொடி வரை பரபரப்பு.. நகம் கடித்த ரசிகர்கள்.. அனல் பறந்த கேமரூன் - செர்பியா ஆட்டம்- யார் வென்றது

கத்தார்: ஃபிஃபா உலகக்கோப்பையில் கால்பந்து ரசிகர்களுக்கு உச்சகட்ட பரபரப்பை கொடுத்த போட்டி இன்று அரங்கேறியுள்ளது.

 FIFA World cup 2022: Cameroon vs serbia match ends in draw

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் சுற்று போட்டியில் குரூப் G -ஐ சேர்ந்த கேமரூன் மற்றும் செர்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் கேமரூன் அணி முதல் கோலை போட்டாலும் செர்பியாவின் கையே தான் ஓங்கியிருந்தது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து செர்பியா அணி வீரர்கள் அட்டாக்கிங் மோடிலேயே அடுத்தடுத்து கோல் அடிக்க முயன்றுக்கொண்டே இருந்தனர். இதனை சாதமாக பயன்படுத்திய கேமரூன் அணியின் சார்லஸ் 29வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதன்பின்னரும் கேமரூன் அணி கோல் அடிக்க முயன்றது. ஆனால் அவர்களின் வியூகத்தை அறிந்த செர்பியா ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றியது.

இன்னும் வெறும் 4 போட்டிகள் தான்.. ரிஷப் பண்ட்க்கு கெடு விதித்த ஸ்ரீகாந்த்..இனி யாரால தடுக்க முடியும் இன்னும் வெறும் 4 போட்டிகள் தான்.. ரிஷப் பண்ட்க்கு கெடு விதித்த ஸ்ரீகாந்த்..இனி யாரால தடுக்க முடியும்

45 நிமிடங்கள் முடிந்தவுடன் கூடுதல் நேரம் கொடுக்கப்படும். அதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட செர்பியா வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 2 - 1 முன்னிலையுடன் முதல் பாதியை முடித்தனர். 2வது பாதி தொடங்கியவுடனும் மேலும் ஒரு கோலை போட்டு 3 - 1 என மாற்றி அமைத்தனர். இதனால் செர்பியா வென்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் இருந்து கேமரூன் அணி ட்விஸ்ட் கொடுத்தது. அந்த அணி செர்பியாவை போன்றே அடுத்தடுத்த நிமிடங்களில் 2 கோல்களை அடித்ததால் 3 - 3 என சமமானது. இதனால் ஆட்டமும் பரபரப்படைந்தது. இன்னும் ஒரு கோல் அடித்தால் கூட வெற்றி பெற்றிவிடலாம் என்ற சூழலில் இரு அணிகளும் கடுமையாக போராடினர். ஆனால் கடைசியில் டிராவிலேயே முடிந்தது.

Story first published: Monday, November 28, 2022, 17:57 [IST]
Other articles published on Nov 28, 2022
English summary
Fans got a special treat in the Cameroon vs serbia match of FIFA World cup 2022, ends in draw
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X