
18 மாதம்
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் 18 மாதங்களுக்கு பிறகு அணியை வழிநடத்தினார். போட்டி தொடங்கியதுமே டென்மார்க்குக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அதனை கோலாக மாற்றவில்லை. இதேபோன்று ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் துனிசியாவுக்கு கிடைத்த பிரி கிக் வாய்ப்பு வீணானது.

மிஸ்சான கோல்
இதேபோன்று ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் துனிசியாகவுக்கும் 21 வது நிமிடத்திலும் டென்மார்க் அணியும் தங்களுக்கு கிடைத்த பிரி கிக் வாய்ப்பை வீணடித்தது. இதே போன்ற ஆட்டத்தின் 24 நிமிடத்தில் துனிசியாவுக்கு கிடைத்த பிரி கிக் வாய்ப்பை அந்த அணி குப்பையில் போட்டது. ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் டென்மார்க் கார்னரில் கிடைத்த வாய்ப்பை கோலாக அடிக்க முயன்ற போது நூலிலையில் கோல் மிஸ் ஆனது.

ஏமாற்றமே மிஞ்சியது
ஆட்டத்தின் முதல் பாதையில் இரு அணிகளும் பூஜ்ஜியத்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இருந்தது. இதனை தொடர்ந்து ஆட்டத்தின் பிற்பகுதியிலாவது இரு அணியும் கோல் அடிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லட்டு போல் கிடைத்த வாய்ப்புகளை துனிசியா வீரர்கள் தவறவிட்டனர். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பாதி கோலாக மாற்றி இருந்தாலே துனிஷியா 12 கோல்கள் அடித்திருக்கும் .அந்த அளவிற்கு துனிசாயாவின் ஆட்டம் இருந்தது.

புள்ளிகள் சமன்
இதேபோன்று டென்மார்க்கும் போட்டியில் தடுமாறியதால் அடுத்தடுத்து மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு வேறு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அது டென்மார்க்குக்கு எவ்வித மாற்றத்தையும் தரவில்லை. ஆட்டத்தின் 78 வது நிமிடத்தில் டென்மார்க் ஃபவுல் செய்ததால் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.