மாஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இரண்டாவது முறையாக பிரான்ஸ் வெற்றி பெறுகிறது.
தற்போது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி முடிந்து உள்ளது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இறுதியாக பிரான்ஸ் வெற்றிபெற்றுள்ளது.
கடந்த ஒரு மாதமாக பிரான்ஸ் இந்த போட்டிக்காக தயாராகிக் கொண்டு இருந்தது. இப்போது அங்கு கொண்டாட்டம் நடந்து வருகிறது.
தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அதிரடியாக ஆடியது. குரேஷியாவின் சிறு சிறு தவறுகளை கூட எளிதாக பயன்படுத்திக் கொண்டது. கடந்த ஒரு மாதமாக இதற்கான கொண்டாட்டம், போட்டிகள் நடந்தது.
தற்போது பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பெரிய வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக கால்பந்து உலகக் கோப்பையில் அந்த அணி வெற்றிபெறுகிறது. இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு.
20 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பிரான்ஸ் அணி கோப்பையை வென்றது. பிரான்சில் நடந்த அந்த போட்டியில் பிரேசிலை வீழ்த்தி பிரான்ஸ் வென்றது.