For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஃபிபா உலகக் கோப்பை: நிற வெறி.. மோசமான கிராமம்... 19 வயதில் சாதித்து காட்டிய பிரான்ஸின் பாப்பே!

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம், பிரான்ஸ் வீரர் பாப்பே பெரிய அளவில் வைரலாகி உள்ளார்.

By Shyamsundar

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம், பிரான்ஸ் வீரர் பாப்பே பெரிய அளவில் வைரலாகி உள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பெரிய வெற்றி பெற்றுள்ளது. குரேஷியா செய்த சில சிறிய தவறுகளை கூட பிரான்ஸ் கோலாக மாற்றி சாதித்து காட்டியுள்ளது.

இந்த போட்டியில் பிரான்ஸ் வீரர் கிலியான் பாப்பே சிறப்பாக விளையாடி உள்ளார். அவரை அந்த நாடே கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.

கோல் அடித்தார்

கோல் அடித்தார்

நேற்றைய போட்டியில் கிலியான் பாப்பே, கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து பிரான்சின் வெற்றியை உறுதி செய்தார். இவர் அடித்த அந்த கடைசி நான்காவது கோல், அத்தனை பிரமாதமான கோல் இல்லை என்றாலும், அவரின் அந்த கோலுக்கு பின், அந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு பின் பெரிய கதை இருக்கிறது. காலம்காலமாக கருப்பின மக்கள் விளையாட்டு துறைகளில் பட்டுவந்த கஷ்டங்களை எல்லாம் இவரும் அனுபவித்து இருக்கிறார்.

போதை தேசம்

போதை தேசம்

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமும் போண்டி என்று சிறிய பிரான்ஸ் கிராமம். ஒரு ''நிக்கா'' படத்தை பார்த்தால் அதில் கருப்பின எப்படி எல்லாம் தவறு செய்வதாக சித்தரிக்கப்படுவார்களோ அதை எல்லாம் இவரை சுற்றி இருக்கும் மக்கள் செய்து இருக்கிறார்கள். அதீத போதை பொருள் பயன்பாடு தொடங்கி ஆயுத கலாச்சாரம் வரை, இந்த போண்டி கருப்பின நகரத்தையும் சில அடிப்படை பிரச்சனைகள் தொடர்ந்து வந்திருக்கிறது.

வறுமையில் வாழ்ந்தார்

வறுமையில் வாழ்ந்தார்

தான் வாழ்ந்த பகுதியின் சூழ்நிலைதான் சரியில்லை என்றாலும், தன்னுடைய குடும்ப சூழ்நிலையும் இவருக்கு சரியில்லை. ஒரு வறுமையான விளையாட்டு வீரன் வாழ்க்கையில் வெற்றி பெற்று பெரியாளாகும் ஏதாவது ஒரு படத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த கதைதான் இவருடையதும். ஆனால் இவர் கதை ஒரே பாடலில் விக்ரமன் படம் போல மாறிவிடவில்லை. சொந்த காலில் வெற்றிபெற்றவர்களுக்கு இந்த கால்பந்து வீரர்தான் சிறந்த எடுத்துக்காட்டு.

சிறுசிறு அணிகள்

சிறுசிறு அணிகள்

பள்ளி அணியில் விளையாடியது, தேர்வில் ஷு இல்லாமல், ஷு வாங்க வழியில்லாமல் விளையாடியது, பின் கல்லூரி அணியில் சில நாட்கள் விளையாடியது, சிறு சிறு குட்டி கிளப்புகளில் விளையாடியது என்று இவரது வாழ்க்கையும், ஜாம்பவான் பீலேவின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இவர் கருப்பின வீரர் என்பதாலேயே பல முறை சக வெள்ளை வீரர்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக

கொஞ்சம் கொஞ்சமாக

கிளப்புக்களில் கொஞ்சம் கொஞ்சமாக புகழை அடைந்த பாப்பே, தன்னுடைய ஆக்ரோஷமான விளையாட்டால், பெரிய நட்சத்திரமாக மாறினார். களத்தில் பந்தை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது, உன்னுடைய காலில் இருந்து பந்து வெளியேறினால் அது சக அணி வீரருக்கு செல்ல வேண்டும், இல்லை கோல் கம்பத்திற்குள் செல்ல வேண்டும். மிகவும், மிகவும்ம்ம், என்று எத்தனை ம்ம்ம்கள் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்துக்கொள்ளுங்கள், அவ்வளவு ஆக்ரோஷமாக ஆட கூடிய திறமை கொண்டவர் பாப்பே.

பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்

பெரிய அளவில் கவனிக்கப்பட்டார்

பாரிஸ் செயின்ட்-ஜெர்மெய்ன் என்ற இவரது, கிளப் இவரை குழந்தை போல வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. பெரிய அளவில் கவனிக்கப்படாத இந்த கிளப்தான் இவரை உருவாக்கியது. இவரை எவ்வளவு காசு கொடுத்தாவது தக்கவைத்துக்கொள்ள அந்த கிளப் முடிவு செய்துள்ளது. உலகிலேயே இரண்டாவது காஸ்ட்லியான வீரர் இவர்தான்.

ஊர் மக்கள்

ஊர் மக்கள்

இந்த நிலையில்தான் தற்போது போதையில் சுற்றித்திரிந்த போண்டி மக்களுக்கு, புதிய புத்துணர்ச்சி கிடைத்து இருக்கிறது. அவர்கள் பகுதியை தவறாக பார்த்தவர்களுக்கு, பாப்பே பெரிய புதிய அழகிய அடையாளத்தை கொடுத்து இருக்கிறார். இதுவரை தவறாக சுற்றி திரிந்தவர்களுக்கு, சூழ்நிலை உங்கள் வாழ்க்கை போக்கை மாற்றாது என்பதை இவர் நிரூபித்து இருக்கிறார்.

சாதனை

சாதனை

பீலே போலவே வாழ்க்கை வரலாற்றை கொண்டுள்ள இவர், பீலே போலவே சாதனை செய்துள்ளார். 60 வருடத்திற்கு முன்பு உலகக் கோப்பை இறுதி போட்டியில் பீலே கோல் அடித்தார். அப்போது அவர்தான் இளம் வீரர். தற்போது அந்த சாதனையை 19 வயதே நிரம்பிய பாப்பே முறியடித்துள்ளார். அதேபோல் இந்த தொடரில் சிறந்த வீரர் என்று விருதையும் பெற்று இருக்கிறார்.

Story first published: Monday, July 16, 2018, 12:28 [IST]
Other articles published on Jul 16, 2018
English summary
FIFA WORLD CUP FINAL: The Beautiful story of France forward player Mbaabe.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X