டெல்லி: ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் 14ம் தேதி துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளை இந்திய நேரத்தின்படி எப்போது பார்க்க முடியும் என்பது தெரியுமா?
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் ரஷ்யாவைத் தவிர மற்ற 31 அணிகள் பல்வேறு தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம் தகுதி பெற்றுள்ளன.
மொத்தம் 62 போட்டிகள் நடக்க உள்ளன. இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், அந்தப் பிரிவில் உள்ள மற்ற அனைத்து அணிகளுடன் விளையாடும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் என, 16 அணிகள் அடுத்தக்கட்ட நாக் அவுட் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.
லீக் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூன் 28 வரையில் நடக்கிறது. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் 30ல் துவங்குகிறது. கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 6, 7-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. பைனல்ஸ் ஜூலை 15ம் தேதி நடைபெறுகிறது.
பிரிவுகள்
ஏ பிரிவு - ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே.
பி பிரிவு - போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ, ஈரான்.
சி பிரிவு - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு, டென்மார்க்.
டி பிரிவு - அர்ஜென்டீனா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா.
இ பிரிவு - பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, செர்பியா.
எப் பிரிவு - ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென்கொரியா.
ஜி பிரிவு - பெல்ஜியம், பனாமா, துனீஷியா, இங்கிலாந்து.
எச் பிரிவு - போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான்.
உலகக் கோப்பையில் நடைபெறும் ஆட்டங்களை சோனி டிவி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்திய நேரப்படி போட்டிக்கான கால அட்டவணை:
ஜூன் 14
ரஷ்யா - சவுதி அரேபியா, இரவு 8.30
ஜூன் 15
எகிப்து - உருகுவே, மாலை 5.30
மொராக்கோ - ஈரான், இரவு 8.30
போர்ச்சுகல் - ஸ்பெயின், இரவு 11.30
ஜூன் 16
பிரான்ஸ் - ஆஸ்திரேலியா, மாலை 3.30
அர்ஜென்டீனா - ஐஸ்லாந்து, மாலை 6.30
பெரு - டென்மார்க், இரவு 9.30
குரேஷியா - நைஜீரியா, மாலை 5.30
ஜூன் 17
கோஸ்டாரிகா - செர்பியா, பகல் 12.30
ஜெர்மனி - மெக்சிகோ, இரவு 8.30
பிரேசில் - சுவிட்சர்லாந்து, இரவு 11.30
ஜூன் 18
ஸ்வீடன் - தென் கொரியா, மாலை 5.30
பெல்ஜியம் - பனாமா, இரவு 8.30
துனீஷியா - இங்கிலாந்து, இரவு 11.30
ஜூன் 19
போலந்து - செனகல், மாலை 5.30
கொலம்பியா - ஜப்பான், இரவு 8.30
ரஷ்யா - எகிப்து, இரவு 11.30
ஜூன் 20
போர்ச்சுகல் - மொராக்கோ, மாலை 5.30
உருகுவே - சவுதி அரேபியா, இரவு 8.30
ஈரான் - ஸ்பெயின், இரவு 11.30
ஜூன் 21
பிரான்ஸ் - பெரு, மாலை 5.30
டென்மார்க் - ஆஸ்திரேலியா, மாலை 4.30
அர்ஜென்டீனா - குரேஷியா, இரவு 11.30
ஜூன் 22
பிரேசில் - கோஸ்டாரிகா, மாலை 5.30
நைஜீரியா - ஐஸ்லாந்து, இரவு 8.30
செர்பியா - சுவிட்சர்லாந்து, மாலை 4.30
ஜூன் 23
பெல்ஜியம் - துனீஷியா, மாலை 5.30
ஜெர்மனி - ஸ்வீடன், இரவு 8.30
தென்கொரியா - மெக்சிகோ, இரவு 11.30
ஜூன் 24
இங்கிலாந்து - பனாமா, மாலை 5.30
ஜப்பான் - செனகல், இரவு 8.30
போலந்து - கொலம்பியா, இரவு 11.30
ஜூன் 25
சவுதி அரேபியா - எகிப்து, இரவு 7.30
உருகுவே - ரஷ்யா, இரவு 8.30
ஈரான் - போர்ச்சுகல், இரவு 11.30
ஸ்பெயின் - மொராக்கோ, இரவு 10.30
ஜூன் 26
ஆஸ்திரேலியா - பெரு, இரவு 7.30
டென்மார்க் - பிரான்ஸ், இரவு 7.30
நைஜீரியா - அர்ஜென்டீனா, இரவு 11.30
ஐஸ்லாந்து - குரேஷியா, இரவு 11.30
ஜூன் 27
தென்கொரியா - ஜெர்மனி, இரவு 7.30
மெக்சிகோ - ஸ்வீடன், இரவு 7.30
செர்பியா - பிரேசில், இரவு 11.30
சுவிட்சர்லாந்து - கோஸ்டாரிகா, இரவு 11.30
ஜூன் 28
ஜப்பான் - போலந்து, இரவு 7.30
செனகல் - கொலம்பியா, இரவு 7.30
பனாமா - துனீஷியா, இரவு 11.30
இங்கிலாந்து - பெல்ஜியம், இரவு 10.30