For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உலகக்கோப்பை கால்பந்து உரிமைக்காக கோடிக்கணக்கில் லஞ்சம்.. குற்றச்சாட்டை மறுத்த கத்தார், ரஷ்யா!

வாஷிங்க்டன் : அமெரிக்காவில் நடந்து வரும் ஃபிபா கால்பந்து அமைப்பு ஊழல் வழக்கில் 2018இல் ரஷ்யாவிலும், 2022இல் கத்தாரிலும் கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்த அனுமதி கொடுத்ததில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக பகிரங்க புகார் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2015இல் உலக கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா தலைவர் செப் பிளேட்டர் மீதான ஊழல் வழக்கு தொடரப்பட்டது. பல வகைகளிலும் பணம் பெற்றுக் கொண்டு ஃபிபா நிர்வாகம் செயல்பட்டதாக பரபரப்பு புகார் கூறப்பட்டது.

மந்தனா மனசுக்குள்ள இன்னும் மந்தனா மனசுக்குள்ள இன்னும் "அவர்"தான் இருக்காராமே.. !

FIFA world cup hosting rights to Russia and Qatar under scanner

அந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த திங்கள் அன்று அமெரிக்காவில் 2018 மற்றும் 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்த பல கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அறிக்கை வெளியானது.

ஆனால், இந்த தகவலை ரஷ்யா மற்றும் கத்தார் நாடுகள் மறுத்துள்ளன. இது குறித்து கத்தார் சார்பாக பதில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை கடுமையாக எதிர்ப்பதாகவும், இது நீதிமன்றத்தின் உள்ளே மட்டுமே கூறப்பட்டுள்ளது எனவும் கூறி உள்ளது.

ரஷ்யா வெளியிட்டுள்ள பதிலில், தாங்கள் விதிமுறைப்படியே உலகக்கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெற்றதாக கூறி உள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் தனிப்பட்ட முறையில் கூறப்படவில்லை. ஏற்கனவே, நடந்து வரும் ஊழல் வழக்கின் ஒரு அங்கமாகவே இது இருப்பதால் 2022 கத்தார் உலகக்கோப்பை தொடருக்கு எந்த சிக்கலும் வராது என கூறப்படுகிறது.

எனினும், தற்போது வெளியாகி உள்ள இந்த தகவலால் புதிய வழக்கு தொடரப்பட்டால் அது 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

Story first published: Wednesday, April 8, 2020, 19:45 [IST]
Other articles published on Apr 8, 2020
English summary
FIFA world cup hosting rights to Russia and Qatar under scanner aftert US prosecutors accused them.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X