For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

3 மணி நேரம் தானே.. பீர் குடிக்காமல் தாராளமாக உயிர் வாழலாம்.. ஃபிபா தலைவர் இன்ஃபான்டினோ!

தோஹா: கால்பந்து உலகக்கோப்பை நடைபெறும் மைதானங்களில் பீர் விற்பனை தடை விதிக்கப்பட்டது தொடர்பாக ஃபிபா அமைப்பின் தலைவர் இன்ஃபான்டினோ கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் கத்தார் அணியை எதிர்த்து ஈகுவடார் அணி மோத உள்ளது.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் உலகம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்துகொண்டுள்ளன. உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர், ரசிகைகள் கத்தாரை நோக்கி படையெடுத்த வந்து கொண்டிருக்கின்றனர்.

ஃபிபா உலகக்கோப்பை.. கலைநிகழ்ச்சியில் பிடிஎஸ் இசைக்குழு.. நடனத்தில் அசத்த காத்திருக்கும் இந்திய நடிகை ஃபிபா உலகக்கோப்பை.. கலைநிகழ்ச்சியில் பிடிஎஸ் இசைக்குழு.. நடனத்தில் அசத்த காத்திருக்கும் இந்திய நடிகை

குவிந்து வரும் ரசிகர்கள்

குவிந்து வரும் ரசிகர்கள்

ஐரோப்பிய நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நேரில் பார்த்து மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதே ரசிகர்களின் குறிக்கோளாகவே இருக்கும். குறிப்பாக பிடித்த அணியின் வெற்றியை ரசிகர்கள் ஒன்றாக கூடி மகிழ்ச்சியை பகிர்ந்து மைதானத்திலேயே கொண்டாடி திளைப்பார்கள். அதுமட்டுமல்லாமல் மைதானங்களிலேயே ரசிகர்கள் உற்சாக பானங்களுடன் வலம் வருவதை பார்க்க முடியும்.

மது விற்பனை

மது விற்பனை

ஆனால் இஸ்லாமிய நாடான கத்தாரில் மது அருந்துவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. அங்கு பொது இடங்களில் மது அருந்த யாருக்கும் அனுமதி கிடையாது. நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே மது விற்பனை செய்யப்படும். உலக கோப்பை போட்டியை காண வரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு வசதியாக மைதானங்களில் குறிப்பிட்ட இடங்களில் மதுவிற்பனை நடைபெறும் என்று முதலில் தகவல் வெளியாகி இருந்தது.

பீர் அருந்த தடை

பீர் அருந்த தடை

தற்போது கால்பந்து போட்டி நடைபெறும் மைதானங்களில் போதை தரக்கூடிய பீர் விற்பனை செய்ய சர்வதேச கால்பந்து சங்கம் திடீரென தடை விதித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே ஆடைக் கட்டுப்பாடு, பாலியல் உறவு, மது அருந்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உயிர் வாழலாம்

உயிர் வாழலாம்

இதுகுறித்து ஃபிபா அமைப்பின் தலைவர் இன்ஃபான்டினோ கூறுகையில், ஒரு நாளில் மூன்று மணி நேரம் பீர் அருந்தாமல் உயிர் வாழ்வது எளிதானது. தனிப்பட்ட முறையில் கூறினால், பீர் அருந்தாமல் இருந்தால் உயிர் பிழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஃபிபா தலைவரின் பேச்சு ரசிகர்களிடையே விரக்தியை அதிகரித்துள்ளது.

Story first published: Saturday, November 19, 2022, 16:24 [IST]
Other articles published on Nov 19, 2022
English summary
FIFA president Infantino has commented on the banning of beer sales at football World Cup stadiums. He Said, Football Fans can Survive Without Beer.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X