இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனி கோஸ்வாமி மறைந்தார்.. பெங்கால் கிரிக்கெட் அணி கேப்டனாகவும் இருந்தவர்!

கொல்கத்தா : இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரும் ஆன சுனி கோஸ்வாமி தன் 82 வயதில் காலமானார்.

Football Legend Chuni Goswami passed away.

கடந்த சில நாட்களாக அவருக்கு இருந்த சர்க்கரை வியாதி, நரம்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் ஏப்ரல் 30 அன்று இதயம் நின்று மாலை ஐந்து மணி அளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மனைவி பெயர் பஸந்தி மற்றும் மகன் பெயர் சுதிப்தோ.

இவர் 1962ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு தொடரில் கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த அணியின் கேப்டனாக செயல்பட்டவர்.

முடிஞ்சா என்னை தாண்டி ஜெயிங்க.. பந்தை கையில் எடுத்த கங்குலி.. அரண்டு போன ஆஸி.. செம திரில்லர்!

1964இல் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்த போதும் அணியின் கேப்டனாக செயல்பட்டவர். 1956 முதல் 1964 வரை இந்திய கால்பந்து அணிக்காக 50 போட்டிகளில் ஆடினார். 27 வயதிலேயே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

Indian Football Legend Chuni Goswami passed away

அதன் பின் மோகுன் பகான் அணிக்காக கிளப் போட்டிகளில் நீண்ட காலம் ஆடினார். அதே சமயம், பெங்கால் கிரிக்கெட் அணியில் இணைந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வந்தார். 1971-72 சீசனில் பெங்கால் அணி ரஞ்சி ட்ராபி இறுதிப் போட்டியில் ஆடியது. அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்தார் சுனி கோஸ்வாமி.

1962 முதல் 1973 வரை 46 முதல் தர போட்டிகளில் பெங்கால் அணிக்காக ஆடினார். ஒரே நேரத்தில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆடி மிரட்டினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Indian Football Legend Chuni Goswami passed away. He captained 1962 Asian games gold winning Indian team. He also represented Bengal in first class cricket matches.
Story first published: Thursday, April 30, 2020, 20:32 [IST]
Other articles published on Apr 30, 2020
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X