வெறித்தனமாக ஆடி வரும் ஏடிகே அணிக்கு எதிராக சென்னையின் எஃப்சி போட்ட திட்டம்!

சென்னை : சென்னையின் எஃப்சி அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் ஏடிகே அணியை சந்திக்கிறது. இப்போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ளது.

2017-18 சீசனின் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி முதல் இரு போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு டிரா உடன் ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது. கோவாவிடம் 0-3 என தோற்ற சென்னையின் அணி மும்பையிடம் கோலற்ற டிரா செய்திருந்தது.

இந்நிலையில் ஐதராபாத் எஃப்சி அணியை 5-0 என நசுக்கிவிட்டு வந்திருக்கும் ஏடிகே அணியை சமாளிக்க வேண்டிய சவாலை சென்னையின் எஃப்சி அணி அடுத்து எதிர்கொள்கிறது.

கோவாவுடனான போட்டியை விட மும்பை உடனான போட்டியில் சென்னையின் அணியின் ஆட்டம் மேம்பட்டிருந்தது. மேலும் அந்த அணி இரு போட்டிகளில் ஒரு கோல் கூட போடாதது குறிப்பிடத்தக்கது.

"மும்பையுடனான போட்டியில் கோல் மட்டும்தான் போடவில்லையே தவிர மற்றபடி தங்கள் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது" என கூறுகிறார் சென்னையின் எஃப்சி பயிற்சியாளர் கிரிகோரி.

ISL 2019 - 20 : ஜாம்ஷெட்பூர் அபார வெற்றி.. 3 கோல் அடித்து அசத்தல்.. ஹைதராபாத் அணியை வீழ்த்தியது!

ரஃபேல் கிரிவல்லரோ, அனிருத் தாப்பா, லால்லின்ஜுவாலா சாங்தே, டிராகோஸ் ஃபிர்டுலெஸ்கு போன்றோர் சென்னையின் அணியை தாங்கிப்பிடிக்கின்றனர். இவர்களை சமாளிக்க ஏடிகே முனைப்பு காட்டும்.

லூஸியன் கோயன் தலைமையிலான சென்னையின் தற்காப்புப் படை ஏடிகேவின் தாக்குதல் படைக்கு சரியான சவாலாக இருக்கும்.

ஐதராபாத்துக்கு எதிராக ஏடிகே வீரர்கள் டேவிட் வில்லியம்ஸ் மற்றும் ராய் கிருஷ்ணா ஆட்டத்தில் அனல் பறந்தது. ஸ்பானிஷ் நடுக்கள வீரர் எடு கார்சியாவும் கடைசி கட்டத்தில் கலக்கினார். பிரபிர்தாஸ், மைக்கேல் சூசைராஜ் ஆகியோரும் தங்கள் பணியில் பிரகாசித்தனர். எனினும் "தங்கள் களத்தில் வலிமையான ஏடிகேவை தடுத்து நிறுத்த முடியும்" என நம்புகிறார் பயிற்சியாளர் கிரிகோரி.

"மும்பைக்கு எதிராக எங்களின் தற்காப்பு குறைகளற்றதாக இருந்தது" என கூறுகிறார் பயிற்சியாளர் கிரிகோரி. "இதே போன்ற சிறப்பான தடுப்பாட்டம் ஏடிகே-வுக்கு எதிராகவும் தொடரும்" என நம்புகிறார் கிரிகோரி.

"ஏடிகே போன்ற அதிரடி தொடக்கம் காட்டும் அணிகளுக்கு எதிராக தற்காப்பு பலனளிக்காவிட்டால் சென்னை அணி தாக்குப்பிடிப்பது சிரமம்" என சென்னையின் பயிற்சியாளர் கிரிகோரியும் ஒப்புக்கொள்கிறார். "சிறப்பான தொடக்கம் பெறும் ஏடிகேவுக்கு எதிராக சரியான ஆட்ட யுக்தியை கடைபிடிப்பது அவசியம்" என்கிறார் அவர்.

Photos Courtesy : ISL Media

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match no. 11 preview
Story first published: Wednesday, October 30, 2019, 15:59 [IST]
Other articles published on Oct 30, 2019
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X