For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ISL 2019 : பெங்களூரு அணி தோல்வியால் தொடரும் மர்மம்.. ப்ளே-ஆஃப் செல்லப் போவது யார்?

நேற்று (ஜனவரி 28) மும்பை சிட்டி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி தோல்வி அடைந்ததால் இந்த சீசனில் மற்ற அணிகளுக்கு ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் மற்ற 6 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் உரிமை இருப்பதாக நம்புகின்றனர்.

மும்பை சிட்டி, பெங்களூரு எஃப்சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, எஃப்சி கோவா, ஜாம்ஷெட்பூர் எஃப்சி. மற்றும் ஏடிகே ஆகிய அணிகள் முதல் நான்கு இடத்திற்குள் வர வேண்டும் எனற் முனைப்புடன் விளையாடி வருகின்றன. இந்நிலையில் மற்ற அணிகளின் நிலை என்ன? தரவரிசையின் கீழ் உள்ள மற்ற அணிகள் என்ன செய்யப்போகின்றன? அவர்களை கைவிட்டு விடலாமா? அல்லது அவர்களில் ஒருவர் பெருமைக்குரியவர்களாக மாற வாய்ப்பு உள்ளதா?

ISL 2019 - All six bottom teams have a chance to enter into top 4 in ISL

எஃப்சி புனே சிட்டி அணி, கேரள பிளாஸ்டர்ஸ் அணி, டெல்லி டைனமோஸ் அணி மற்றும் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி ஆகியவை இந்த சீசன் தொடக்கத்தில் தங்களுக்கான இடங்களை தக்க வைக்க பெரிதும் போராடினர்.

இது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறும்போது, சென்னை அணி திருப்திகரமாக இல்லை. அதற்கு முழுப் பொறுப்பும் நான்தான். இந்த சீசனின் முடிவுக்கு ஒரு பயிற்சியாளர் என்ற வகையில் நானே பொறுப்போற்க வேண்டும் என்றார்.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர். சென்னை அணியைப் பொறுத்த வரை தொடர்ந்து ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற முடியவில்லை. ஏஎஃப்வி கால்பந்து போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடர் தோல்வியை முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ISL 2019 - All six bottom teams have a chance to enter into top 4 in ISL

இதே போல் கேரள பிளாஸ்டர்ஸ் அணி மற்றும் டெல்லி டைனாமோஸ் ஆகியவை இந்த பருவத்தில் இதுவரை ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. புனே மூன்று வெற்றிகளைக் பெற்று இந்த நான்கு அணிகளில் 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் கடைசி ஆட்டத்தில் இருந்து கோவா அணி நன்றாக விளையாடுகிறார்கள். தற்போது அவர்கள் 11 ஆட்டங்களில் விளையாடி 20 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இதையடுத்து அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் இருந்தாலும் அதில் ரிஸ்க் உள்ளது.

ISL 2019 - All six bottom teams have a chance to enter into top 4 in ISL

நாங்கள் இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் மி நன்றாக விளையாடினோம் என்கிறார் டெல்லி அணின் பயிற்சியாளர் ஜோசத் கொம்புவ. பல போட்டிகளில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் தற்போது ஒரே ஒரு வெற்றி மட்டுமே கிடைத்துள்ளது.

தற்போது குளிர் காலத்தில் கிடைத்த நீண்ட இடைவேளை அனைத்து அணிகளுக்கும் ஊக்கத்தைத் தந்துள்ளது. இந்த அணிகளில் இரண்டுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்த போட்டி தங்களை தோல்வியில் இருந்து மீட்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

Story first published: Tuesday, January 29, 2019, 18:10 [IST]
Other articles published on Jan 29, 2019
English summary
ISL 2019 - All six bottom teams have a chance to enter into top 4 in ISL.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X