கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் - எஃப்சி கோவா அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற உள்ளது.
மும்பை சிட்டி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஈஸ்ட் பெங்கால் அணி தொடர்ந்து ஏழு போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்தது. ஆனால், நம்பர் 1 அணியான மும்பை சிட்டியிடம் தோல்வி அடைந்தது.
எனினும், அந்த அணி அடுத்து வரும் போட்டிகளில் வென்று நான்கு இடங்களுக்குள் நுழைய ஆர்வமாக உள்ளது.
மறுபுறம் கோவா அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அந்த அணி கடந்த சில போட்டிகளில் தோல்வி அடையாமல் சிறப்பாக ஆடி வருகிறது. மும்பை சிட்டி அணிக்கு அடுத்ததாக நிலையாக ஆடி வரும் அணி எஃப்சி கோவா மட்டுமே.
கடைசி ஆறு போட்டிகளில் அந்த அணி தோல்வி அடையாமல் ஆடி உள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணியும் கடும் போட்டி அளிக்கும் என்பதால் இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும் என தெளிவாக கூற முடியாது.
விமர்சகர்கள் ஈஸ்ட் பெங்கால் அணி, கோவாவுக்கு ஈடு கொடுத்து ஆடும் என்றே கருதுகிறார்கள். 1 - 1 என போட்டி டிரா ஆக வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர். இந்தப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி தோல்வி அடைந்தால் அது அந்த அணி முதல் நான்கு இடங்களுக்குள் செல்லும் வாய்ப்பை குறைக்கும்,