ஐஎஸ்எல் தொடர்: இறுதிகட்டத்தில் அடிக்கப்பட்ட கோல்... முதல் முறையாக மகுடம் சூடிய மும்பை சிட்டி எஃப்சி

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் சாம்பியன் கோப்பையை முதல் முறையாக வென்று மகுடம் சூடியது மும்பை அணி.

மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி கோவாவில் உள்ள பதோர்தா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

5 மாசமா ரசிகர்களை கட்டிப்போட்ட ஐஎஸ்எல் தொடர்... நாளை இறுதிப்போட்டி 5 மாசமா ரசிகர்களை கட்டிப்போட்ட ஐஎஸ்எல் தொடர்... நாளை இறுதிப்போட்டி

இதில் டேவிட் வில்லியம்ஸ் பாக் ஸின் உதவியதன் மூலம் 2-1 என்ற கோல்கணக்கில் வென்று கோப்பை வென்றது மும்பை அணி.

ஐஎஸ்எல் தொடர்

ஐஎஸ்எல் தொடர்

ஐ.எஸ்.எல் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி 5 மாதங்களாக நடைபெற்று வந்தது. மொத்தம் 11 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு அணியும் தலா 20 ஆட்டங்களில் விளையாடியதன் முடிவில், மும்பை சிட்டி எஃப்சி, ஏடிகே மோகன் பகான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கோல்

கோல்

நேற்று நடைபெற்ற இறுதிபோட்டியில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மோகன் பாகன் அணி சார்பாக வில்லியம்ஸ் கோலை நோக்கி 2 முறை பந்தை தாக்கினார் ஆனால் இரண்டும் கோலாக மாறவில்லை. மறுமுனையில் மும்பை அணி சார்பாக முன்கள வீரர்களான ஃபெர்னாண்டஸ் மற்றும் லெ ஃபாண்ட்ரெ ஆகியோர் அடித்த பந்துகளும் கோலாக மாறவில்லை.

கடும் தாக்குதல்

கடும் தாக்குதல்

தொடர்ந்து தாக்குதல் நடத்திய மோகன் பேகன் அணிக்கு ஒவ்வொரு முறையும் கோல்கள் தவறின. எனினும் சற்றும் சோற்வடையாத அந்த அணி ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா கொடுத்த பாசை வில்லியம்ஸ் கோலாக மாற்றி உதவி செய்ய முன்னிலை பெற்றது. 29-வது நிமிடத்தில் மும்பை அணியின் அகமது ஜஹூ நடுப்பகுதியில் இருந்து மற்றொரு வீரரான பிபின் சிங்கிற்கு பந்தை உதைத்தார். இதை ஏடிகே மோகன் பகான் அணியைச் சேர்ந்த டிரி தடுக்க முயன்றார். ஆனால் இது துர திருஷ்டவசமாக சுய கோலாக மாறியது. இதனால் முதல் பாதியில் ஆட்டம் 1-1 என்ற சமநிலையை அடைந்தது.

கடைசி கோல்

கடைசி கோல்

ஆட்டத்தின் 2வது பாதியில் கொல்கத்தா அணி தொடர் தாக்குதல் நடத்தி வந்ததே தவிற அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. மும்பைக்கும் கொல்கத்தாவின் தாக்குதலை சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது. இதனால் ஆட்டம் கடைசி நிமிடத்தை எட்டியது. பின்னர் கடைசி நிமிடத்தில் மும்பை அணியின் ஒக்பேசி கொடுத்த பாசை பிபின் சிங் கோலாக மாற்றி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறச்செய்தார்.

சாம்பியன்

சாம்பியன்

மீண்டும் ஆட்டத்தை சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தாக்குதல் நடத்திய மோகன் பேகன் அணிக்கு கோல் எதுவும் கிடைக்காமல் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mumbai City FC wins title, beats ATK Mohun Bagan in ISL Final
Story first published: Sunday, March 14, 2021, 10:27 [IST]
Other articles published on Mar 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X