For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

எதிரணியாக இருந்தால் என்ன.. ஜோர்டான் பெண்கள் செய்த உயர்ந்த செயல்.. குவியும் பாராட்டு.. வைரல் வீடியோ!

Recommended Video

Jordan women protects opponent from showing her hair

ஜோர்டான் : ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற இரண்டு மகளிர் கிளப் இடையே ஆன கால்பந்து போட்டியில், எதிரணி வீராங்கனையின் எண்ணத்துக்கு, கலாச்சாரத்துக்கு மதிப்பளித்து நடந்து கொண்டனர் ஜோர்டான் நாட்டு வீராங்கனைகள்.

அடுத்தவரின் எண்ணத்துக்கு மதிப்பளித்து நடந்து கொள்வது என்றால் என்ன? என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

அதே போல, குறிப்பறிந்து உதவுதல் என்பதற்கும் இந்த ஜோர்டான் பெண்கள் செய்த செயலே சிறந்த உதாரணம்.

யாரும் நெருங்க முடியாத டான் பிராட்மேன் ரெக்கார்டு.. அசால்ட்டாக உடைத்து கெத்து காட்டிய இந்திய வீரர்!யாரும் நெருங்க முடியாத டான் பிராட்மேன் ரெக்கார்டு.. அசால்ட்டாக உடைத்து கெத்து காட்டிய இந்திய வீரர்!

கிளப் போட்டி

கிளப் போட்டி

ஜோர்டானில் மகளிர் கிளப் சாம்பியன்ஷிப் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கடந்த வாரம் நடந்த போட்டி ஒன்றில் ஷபாப் அல் ஓர்டான் என்ற ஜோர்டானை சேர்ந்த கிளப் அணியும், ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த அராப் ஆர்த்தடாக்ஸ் கிளப் அணியும் மோதின.

ஹிஜாப் அணிந்து ஆடினர்

ஹிஜாப் அணிந்து ஆடினர்

இந்தப் போட்டியில் அராப் ஆர்த்தடாக்ஸ் கிளப் அணியை சேர்ந்த வீராங்கனைகள் தலை முடியை மறைக்கும் வகையிலான ஹிஜாப் அணிந்து ஆடினர். தலை முடியை வெளி உலகுக்கு காட்டக் கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் அவ்வாறு அணிந்து ஆடினர்.

பதற்றம்

பதற்றம்

இந்தப் போட்டி பரபரப்பாக நடந்து வந்த போது, அராப் அணி வீராங்கனை ஒருவரின் ஹிஜாப் கலைந்தது. அதனால், உடனடியாக அவர் நின்று விட்டார். அதை சரி செய்ய வேண்டும் என்ற பதற்றம் அவருக்கு ஏற்பட்டது.

சூழ்ந்து நின்றனர்

சூழ்ந்து நின்றனர்

அதை சரியாக புரிந்து கொண்ட ஜோர்டான் கிளப் வீராங்கனைகள் உடனடியாக போட்டியை நிறுத்திவிட்டு அவரை சூழ்ந்து, அவர் தலைமுடி வெளியே தெரியாதவாறு நின்று கொண்டனர்.

பரவிய வீடியோ

இந்த காட்சி அடங்கிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார் ஒருவர். அது பெரிய அளவில் வைரல் ஆனது. சுமார் 25 லட்சம் மக்கள் இதை பார்த்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக உலகம் முழுவதும் இந்த வீடியோ பரவி வருகிறது.

பாராட்டு

பாராட்டு

பலரும் ஜோர்டான் பெண்கள் குறிப்பறிந்து செயல்பட்டதை பாராட்டி வருகின்றனர். அதே ஜோர்டான் கிளப் அணி தான் அந்த கால்பந்து தொடரையும் வென்றுள்ளது. ஆனால், அதைக் காட்டிலும் அவர்கள் செய்த செயலுக்காக தற்போது பாராட்டை அள்ளி வருகிறார்கள்.

Story first published: Monday, October 21, 2019, 13:09 [IST]
Other articles published on Oct 21, 2019
English summary
Jordan women protects opponent from showing her hair after Hijab displaced
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X