தமிழகம், கேரளா மோதிய சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது!

Posted By:

பெங்களூர்: தமிழகம், கேரளா மோதிய சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்த தொடரின் தேசிய சுற்றுக்கு கேரளா தகுதி பெற்று இருக்கிறது.

மாநிலங்களுக்கு இடையேயான சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தேசிய சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடைசி போட்டி இன்று பெங்களூரில் நடந்தது.

Kerala qualify for Santosh Trophy national round after draw with TN

கேரளாவும் தமிழ்நாடும் மோதிய இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. ஆனால் போட்டி நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

கூடுதல் நேரத்திலும் அணிகள் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆனால் இதுவரை நடந்த போட்டிகளில் கேரளா அதிக கோல் அடித்து இருக்கிறது.

இந்த கோல் ரேட் காரணமாக அவர்கள் தேசிய சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளனர். தேசிய போட்டிகள் அடுத்த வாரம் நடக்க இருக்கிறது.

Story first published: Monday, January 22, 2018, 20:52 [IST]
Other articles published on Jan 22, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற