பிரெஞ்ச் வீரர் கைலியன் ம்பாப்பேவிற்கும் கொரோனா.. பிரான்ஸ் தேசிய லீக் போட்டியிலிருந்து விலகல்

பாரீஸ் : கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பையடுத்து பிரான்சின் தேசிய லீக் போட்டியிலிருந்து பிரபல கால்பந்தாட்ட வீரர் கைலியன் மபாப்பே விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக பாரீஸ் -செயிண்ட் ஜெர்மன் அணியிலிருந்து விலகியுள்ள 7வது வீரர் இவர்.

கடந்த வாரத்தில் இந்த அணியிலிருந்து பிரேசில் வீரர் நெய்மர் கொரோனா காரணமாக விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கால்பந்தாட்ட வீரர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரான்சின் பாரீஸ் -செயிண்ட் ஜெர்மன் அணியின் வீரர் கைலியன் ம்பாப்பே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கால்பந்தாட்ட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் அந்த அணியின் நெய்மர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தேசிய லீக் தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது கைலியன் ம்பாப்பேவிற்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடரிலிருந்து விலகிய 4வது வீரர் ம்பாப்பே என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேபிடல்சில் களமிறங்கிய அடுத்த சிங்கம்... பயிற்சியை துவக்கிய ரபடா

இதையடுத்து பிரான்ஸ் தேசிய லீக்கில் குரோட்டியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தேசிய அணி நிர்வாகம் கூறியுள்ளது. நேற்று மாலை அவர் இந்த லீக்கிற்கான பயிற்சி போட்டிகளில் பங்கேற்ற நிலையில், இந்த டெஸ்ட் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அவர் 8 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Mbappe is the fourth player to be withdrawn from the France squad following a positive COVID-19 test
Story first published: Tuesday, September 8, 2020, 14:27 [IST]
Other articles published on Sep 8, 2020
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X