மெஸ்ஸி விளையாடப்போகும் அடுத்த அணி... பேச்சுவார்த்தை முடிந்தது.. சம்பளத் தொகை எவ்வளவு? - முழு விவரம்

சென்னை: பார்சிலோனா கிளப் அணியில் இருந்து விலகியதை அடுத்து லியோனல் மெஸ்ஸி அடுத்ததாக எந்த அணியில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பார்சலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்த நட்சத்திர லியோனல் மெஸ்ஸி, சமீபத்தில் அந்த அணியில் இருந்து விலகினார்.

21 வருடங்களாக தான் விளையாடி வந்த பார்சிலோனா அணியை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.

மேடையில் திடீரென கண்கலங்கிய மெஸ்ஸி.. பார்சிலோனா அணியில் இருந்து விடைபெற்றார்.. சோகத்தில் ரசிகர்கள்! மேடையில் திடீரென கண்கலங்கிய மெஸ்ஸி.. பார்சிலோனா அணியில் இருந்து விடைபெற்றார்.. சோகத்தில் ரசிகர்கள்!

மெஸ்ஸி விலகல்

மெஸ்ஸி விலகல்

பார்சிலோனா கிளப் அணியுடன் மெஸ்ஸி போட்டிருந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றது. ஒப்பந்தத்தை புதுபிக்க நீண்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் அது நிறைவேறவில்லை. மெஸ்ஸி தனது ஊதியத்தை 50% குறைத்துக்கொள்வதாக கூறியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத்தெரிகிறது. இதனால் நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை எனக்கூறப்படுகிறது.

வழியனுப்பும் நிகழ்ச்சி

வழியனுப்பும் நிகழ்ச்சி

இதனால் சமீபத்தில் ஃபேரவல் நிகழ்ச்சியுடன் பார்சிலோனா அணியை விட்டு வெளியேறினார் மெஸ்ஸி. அப்போது உணர்ச்சி வசப்பட்டு லியோனல் மெஸ்ஸி மேடையிலேயே திடீரென கண்கலங்கியது இன்று வரை கால்பந்து ரசிகர்களிடம் சோகத்தை கொடுத்து வருகிறது.

2 ஆண்டு ஒப்பந்தம்

2 ஆண்டு ஒப்பந்தம்

இந்நிலையில் மெஸ்ஸில் அடுத்ததாக விளையாடவிருக்கும் அணி குறித்து தெரியவந்துள்ளது. மெஸ்ஸி 2 அணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பாரிஸ் செய்ண்ட் ஜெர்மண் அணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கான ஆண்டு ஊதியமாக சுமார் ரூ.200 கோடி பேசப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இரு தரப்பும் தயார்

இரு தரப்பும் தயார்

தற்போதைய சூழலுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், இது முடிந்தவுடன் 3வது ஆண்டுக்கும் ஒப்பந்தம் போட இரு தரப்பிலும் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 3வது ஆண்டுக்கும் இதே ஊதியத்தை பெற்றுக்கொள்ளவும் மெஸ்ஸில் தயாராக உள்ளார் என தெரிகிறது.

கண் கலங்கிய மெஸ்ஸி

கண் கலங்கிய மெஸ்ஸி

முன்னதாக பேசிய மெஸ்ஸி, என் வாழ்நாளில் இப்படி ஒரு நாள் வரும் என நினைக்கவே இல்லை. இந்த 21 ஆண்டு பயணம் முடிவடைவது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே வார்த்தைகள் வரவில்லை. கிளப்புக்குள் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன். ஆனால் அணிக்கு 'Gud Bye' சொல்வேன் என்று நினைத்துப்பார்கவே இல்லை என மனம் உருகி பேசியிருந்தார்.

ட்ரெண்டிங் ஹேஷ்டேக்

ட்ரெண்டிங் ஹேஷ்டேக்

தற்போது அவர் பாரிஸ் அணிக்காக களமிறங்கவுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி கால்பந்து ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சமூக வலைதளங்களில் Messi in PSG என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகிறது.

புதிய ஒப்பந்தம்?

புதிய ஒப்பந்தம்?

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியிருந்தாலும், மெஸ்ஸி இன்னும் வேறு எந்த கிளப்புடனும் ஒப்பந்தம் குறித்து பெரிய அளவில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத்தெரிகிறது. எனவே தற்போதைக்கு அவர் எந்த அணியை சேர்ந்தவரும் இல்லை. விரைவில் அவரது புதிய ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
கணிப்புகள்
VS
English summary
Lionel Messi agrees to join Paris Saint-Germain on two-year contract
Story first published: Tuesday, August 10, 2021, 18:36 [IST]
Other articles published on Aug 10, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X