For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மீடியாக்களுடன் "டூ" விட்டார் லியோனல் மெஸ்ஸி!

ஊடகங்களுடன் அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் இனி பேச மாட்டார்கள், நாங்கள் ஊடகங்களைப் புறக்கணிக்கிறோம் என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

சான் ஜுவான், அர்ஜென்டினா: அர்ஜென்டினா கால்பந்து அணி ஊடகங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாக அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பால் அர்ஜென்டினா ஊடகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அர்ஜென்டினா வீரர் எஸக்கியல் லாவெஸ்ஸி போதைப் பொருள் உட்கொண்டதாக வந்த செய்தியால் கோபமடைந்து இந்த முடிவை மெஸ்ஸி எடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த அர்ஜென்டினா அணியும் ஊடகங்களைப் புறக்கணிப்பதாகவும், அர்ஜென்டினா வீரர்களோ அல்லது நிர்வாகமோ யாருமே ஊடகங்களுடன் பேச மாட்டார்கள் என்றும் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

உலகக் கோப்பை எரிச்சல்

உலகக் கோப்பை எரிச்சல்

உண்மையில் மெஸ்ஸியின் இந்த முடிவுக்கு இப்போதைய எஸக்கியல் விவகாரம் காரணமாக இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. மாறாக, உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது அர்ஜென்டினாவின் செயல்பாடுகள் குறிப்பாக மெஸ்ஸியின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகின. அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல அவர் தவறி விட்டதாக ஊடகங்கள் காய்ச்சி எடுத்தன. அதை மனதில் வைத்தே இப்போது மெஸ்ஸி அதிரடி காட்டியிருப்பதாக சொல்கிறார்கள்.

போட்டிக்குப் பிறகு பொங்கல்

போட்டிக்குப் பிறகு பொங்கல்

நேற்று இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு சான் ஜுவான் நகரில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் கொலம்பியாவை அர்ஜென்டினா பொளந்து கட்டி வென்றது. இப்போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. அதில் மெஸ்ஸி ஒரு கோலடித்தார். லூகாஸ் பிராட்டோ, ஏஞ்செல் டி மரியா தலா ஒரு கோல் போட்டனர்.

ஸாரி உங்க கூட டூ

ஸாரி உங்க கூட டூ

போட்டிக்குப் பிறகு ஒட்டுமொத்த அர்ஜென்டினா அணி வீரர்கள், நிர்வாகத்தினருடன் செய்தியாளர்களை மைதானத்தில் வைத்து சந்தித்தார் மெஸ்ஸி. அப்போது நடு நாயகமாக நின்றபடி தனது அறிவிப்பை வெளியிட்டு ஊடகத்தினருக்கு ஷாக் கொடுத்தார். மெஸ்ஸி கூறுகையில், வீரர்கள் யாரும் இனி உங்களுடன் பேச மாட்டார்கள். இதற்கான காரணம் உங்களுக்கே தெரியும்.

ரொம்ப சீரியஸ் புகார்

ரொம்ப சீரியஸ் புகார்

லாவெஸ்ஸி மீது மீடியாக்கள் தொடுத்து வரும் குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. அவமரியாதையானவை. பொறுத்துக் கொள்ள முடியாதவை. நீங்கள் இப்படிச் செய்திருக்கக் கூடாது. நாங்கள் தோற்றால், வென்றால், மோசமாக விளையாடினால் அல்லது நன்றாக விளையாடினால் விமர்சியுங்கள், கருத்துச் சொல்லுங்கள். ஆனால் எங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது தவறு. இப்போது அதற்கு நாங்கள் முடிவு கட்டாவிட்டால் எப்போதும் அதைச் செய்ய முடியாது என்றார் மெஸ்ஸி.

நான் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை - லாவெஸ்ஸி

நான் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை - லாவெஸ்ஸி

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட வீரர் லாவெஸ்ஸி தன் மீதான புகார்களை மறுத்துள்ளார். நான் அப்படிச் செய்யவில்லை. இதுதொடர்பாக செய்தி போட்டவர்கள் மீது நான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார். இவர் சீனாவின் ஹீபி பார்ச்சூன் என்ற கால்பந்து கிளப் அணியிலும் ஆடி வருகிறார்.

மெஸ்ஸியின் அதிரடி அறிவிப்பு அர்ஜென்டினாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, November 16, 2016, 11:23 [IST]
Other articles published on Nov 16, 2016
English summary
Lionel Messi scored a majestic free-kick as Argentina reignited their misfiring 2018 World Cup qualification campaign against Colombia on Tuesday (November 15) before declaring a media boycott over claims of drug use by a team-mate. Barcelona maestro Messi was at his bewitching best in a 3-0 win over the Colombians which included his 10th-minute 30-yard free-kick before assists for Lucas Pratto and Angel Di Maria.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X