ஒரே நாளில் 2 அதிர்ச்சி செய்தி..கால்பந்து ரசிகர் இதயம் தாங்காது.. மெஸ்ஸிக்கு பிறகு ரொனால்டோவின் ஷாக்

மான்செஸ்டர் : கால்பந்து உலகில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் என்றால் அது மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தான்.

ஏற்கனவே மாலை மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி சவுதி அரேபியாவிடம் தோல்வியை தழுவி அதிர்ச்சி கொடுத்தது.

இந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீளாத நிலையில் தற்போது போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய ஷாக் ஒன்றை கொடுத்துள்ளார்.

காரணம்

காரணம்

இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ரொனால்டோ விளையாடி வந்தார். இந்த நிலையில் தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் பயிற்சி முகாமில் பங்கேற்க இயலாது என்று சில மாதங்களுக்கு முன்பு ரொனால்டோ கூறியிருந்தார். இதனை மான்செஸ்டர் அணி நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

விரிசல்

விரிசல்

இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ,மான்செஸ்டர் அணியை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக அந்த அணியின் வேளாளரை நான் மதிப்பதே கிடையாது. அவர் மீது நான் மரியாதை வைத்தது இல்லைஎன்று குறிப்பிட்டிருந்தார் .இதனால் இருதரப்பினருக்கும் விரிசல் அதிகமானது.

விடுவிப்பு

விடுவிப்பு

இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அணியை விட்டு உடனே விலகுகிறார். இரு தரப்பினரும் இணைந்து எடுத்த முடிவு இது என்று குறிப்பிட்டுள்ளது. மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

ரொனால்டோ கருத்து

ரொனால்டோ கருத்து

இதற்கு பதிலளித்துள்ள ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இருந்து நான் விலகி உள்ளேன்.எனினும் ரசிகர்களுடன் உள்ள என்னுடைய பந்தம் என்றும் நீங்காது என்று குறிப்பிட்டுள்ளார்.மான்செஸ்டர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ 346 போட்டிகளில் விளையாடி 145 கோல்களை அடித்திருக்கிறார். ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான இந்த பிரச்சனை அவருடைய உலகக் கோப்பை கவனத்தை சிதறடிக்கும் கால்பந்து விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS
English summary
Manchester united released cristiano ronaldo from the team ஒரே நாளில் 2 அதிர்ச்சி செய்தி..கால்பந்து ரசிகர் இதயம் தாங்காது.. மெஸ்ஸிக்கு பிறகு ரொனால்டோவின் ஷாக்
Story first published: Wednesday, November 23, 2022, 0:01 [IST]
Other articles published on Nov 23, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X