For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

வீட்டுக்குள்ளேயே இருங்க.. தைரியமா இருங்க.. பயப்படாதீங்க.. மக்களுக்கு மெஸ்ஸி மெசேஜ்!

பியூனஸ் அயர்ஸ்: கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வரும் நிலையில் மக்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

கொரோனாவை மனஉறுதியோட எதிர்கொள்வோம்... கோலி அட்வைஸ்

பார்சிலோனா அணிக்காக ஆடி வரும் அர்ஜென்டினா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி இதுதொடர்பாக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 5000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடுகள் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

தைரியமா இருங்க

தைரியமா இருங்க

இந்த நிலையில் மெஸ்ஸி இதுதொடர்பாக பேசுகையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும், பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். நோய்ப் பரவலைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

கால்பந்து போட்டிகள் ரத்து

கால்பந்து போட்டிகள் ரத்து

தற்போது ஐரோப்பா முழுவதும் கால்பந்துப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மெஸ்ஸியும் விளையாடாமல் தனது குடும்பத்தினருடன் ஓய்வில் உள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஸ்ஸி மேலும் கூறுகையில், உடல் ஆரோக்கியம்தான் முதலில் முக்கியம். இப்படிப்பட்ட ஓய்வு எல்லா நேரமும் நமக்குக் கிடைக்காது. எனவே இதை முழுமையாக அனுபவியுங்கள். கூடவே கொரோனா குறித்த விழிப்புணர்வுடனும் இருங்கள் என்றார்.

மனைவி, குழந்தைகளுடன் ஓய்வு

மனைவி, குழந்தைகளுடன் ஓய்வு

மெஸ்ஸி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஓய்வைக் கழித்து வருகிறார். விரைவில் நிலைமை சுமூகமாகும் என்றும் மெஸ்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுவரை பாதிக்கப்பட்டோருக்கு மனதளவில் அனைவரும் துணையாக இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இது உலகம் முழுவதும் கடினமான சமயம். அனைவரும் இதை கடந்து வருவோம். நடந்தது வருத்தம் தருகிறது. அதேசமயம், அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம் என்றும் கூறியுள்ளார் மெஸ்ஸி.

அனைவருக்கும் ஆதரவாக இருப்போம்

அனைவருக்கும் ஆதரவாக இருப்போம்

உலகம் முழுவதும் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும், அரசுகளும், பல்துறையினரும் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு அனைவரும் முழுமையான ஆதரவுடன் இருப்போம். விரைவில் இந்த துயர் நீங்கும் என்று பிரார்த்திப்போம். அனவரும் வலிமையுடன் போராட நான் விரும்புகிறேன். அனைவருடனும் நான் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் மெஸ்ஸி.

Story first published: Sunday, March 15, 2020, 14:10 [IST]
Other articles published on Mar 15, 2020
English summary
Argendina Fooball Player Leonel Messi asked the people to stay strong against Coronavirus
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X