அரை இறுதிக்கு புனே சிட்டி தகுதி… அடுத்தது சூப்பர் மச்சான்கள்தான்!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

மும்பை: எப்சி கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதும், எப்சி புனே சிட்டி, ஐஎஸ்எல் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 4வது சீசன் நடந்து வருகிறது. அறிமுக அணியான பெங்களூரு எப்சி முதல் அணியாக, அரை இறுதிக்கு நுழைந்து விட்டது. மீதமுள்ள மூன்று இடங்களுக்கு ஆறு அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில், எப்சி கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், எப்சி புனே சிட்டி மோதியது. இதில் 4-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், 29 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள எப்சி புனே சிட்டி முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்த சீசனில் எப்சி புனே சிட்டி அணி சந்தித்த மிக மோசமான தோல்வி இதுவாகும். ஆனாலும், இதுவரை விளையாட ஆட்டங்களில் மிகச் சிறப்பாக விளையாடியது. அடுத்து, மார்ச் 2ம் தேதி டெல்லி டைனமோஸ் அணியுடன் மோதுகிறது. அந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், எப்சி புனே சிட்டி முதல் நான்கு அணிகளுக்குள் இடம்பெறும். அதேபோல் மற்ற அணிகள் விளையாடும் ஆட்டங்களில் எந்த மாற்றம் வந்தாலும், முதல் நான்கு இடங்களுக்குள் எப்சி புனே சிட்டி இடம்பெறும்.

கடும் போட்டியில் நான்கு அணிகள்

கடும் போட்டியில் நான்கு அணிகள்

தற்போதைய நிலவரப்படி, நான்கு அணிகள், 29 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. அதாவது அடுத்து டெல்லி டைனமோஸ் அணியுடன் எப்சி புனே சிட்டி தோல்வியடைத்தால், அது 29 புள்ளிகளுடன் இருக்கும். அது போல, எப்சி மும்பை சிட்டிக்கு எதிராக சென்னையின் எப்சி தோல்வியடைந்தாலும், கோவா சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றாலும், மும்பை சிட்டி தனது அடுத்த இரண்டு ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிகளு 29 புள்ளிகளுடன் இருக்கும்.

அரை இறுதியில் சென்னையின் எப்சி

அரை இறுதியில் சென்னையின் எப்சி

இவ்வாறு நான்கு அணிகள், ஒரே புள்ளியில் இருக்கும்போது, ஒவ்வொரு அணியும், எதிர் அணியுடன் விளையாடிய போட்டியின் முடிவு அடிப்படையில், கணக்கிடப்படும். அதன்படி, மும்பை சிட்டி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணியை வென்றதன் அடிப்படையில் எப்சி புனே சிட்டி அரை இறுதிக்கு தகுதி பெறும். அப்போது சென்னையின் எப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகளும் அரை இறுதிக்கு நுழைந்துவிடும்.

அரை இறுதிக்கு நுழைந்தது

அரை இறுதிக்கு நுழைந்தது

ஒரு வேளை எப்சி கோவா, அடுத்து விளையாட உள்ள ஏடிகே மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வென்றால், அது 30 புள்ளிகளைப் பெறும். அப்போது, 29 புள்ளிகளுடன் மூன்று அணிகள் இருக்கும். அப்போதும் எப்சி புனே சிட்டி தகுதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

அரை இறுதிக்கு நுழைவது யார்

அரை இறுதிக்கு நுழைவது யார்

தற்போதைய நிலையில், பெங்களூரு எப்சி மற்றும் எப்சி புனே சிட்டி அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள அணிகளுக்கு தான் அடுத்தப் போட்டிகள் மிகவும் முக்கியமானவை. அடுத்ததாக, இன்று நடக்கும் ஆட்டத்தில், மும்பை சிட்டி - டெல்லி டைனமோஸ் மோதுகின்றன. நாளை, எப்சி கோவா - ஏடிகே அணிகள் மோதுகின்றன. மார்ச் 1ம் தேதி பெங்களூரு எப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ், 2ம் தேதி புனே சிட்டி - டெல்லி டைனமோஸ் , 3ம் தேதி சென்னையின் எப்சி - மும்பை சிட்டி, 4ம் தேதி ஜாம்ஷெட்பூர் - கோவா மற்றும் ஏடிகே - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

Story first published: Tuesday, February 27, 2018, 11:41 [IST]
Other articles published on Feb 27, 2018
+ மேலும்
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற