For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஜெர்மனியை வீழ்த்தியது அறுதப் பழசான வியூகம்தான்.. ஒரு விறு விறு அலசல்!

By Aravinthan R

மாஸ்கோ:

இந்த முறை கால்பந்து உலகக் கோப்பையில் பல அதிர்ச்சித் தோல்விகளை பார்த்து விட்டோம். பெரிய அணி, திறமையான வீரர்கள் நிறைந்த அணி, “ரோனால்டோ’டா”, “மெஸ்சி’டா”, போன்ற அறைகூவல்கள் எல்லாம் மாறி, சிறிய அணிகள் என நினைத்த பல அணிகள் அதிர்ச்சி அளித்துக் கொண்டே வந்தன

முதலில், அர்ஜென்டினா குரூப் சுற்றோடு வெளியேறும் என நினைத்த நிலையில், மற்ற அணிகளின் தோல்வியால், தன் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. ஆனால், எதிர்பாராத வகையில் சென்ற உலகக்கோப்பை சாம்பியன் ஜெர்மனி, குரூப் சுற்றோடு வெளியேறுகிறது.

ஜெர்மனியின் தோல்வி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. ஜெர்மனி ஏன் குரூப் சுற்றோடு வெளியேறியது? இதோ ஐந்து முக்கிய காரணங்கள் -


#5 முன் வரிசை காலி

#5 முன் வரிசை காலி

ஜெர்மனியின் முன் வரிசை ஸ்ட்ரைக்கரான டிமோ வெர்னெர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கோல் அடிப்பது என்பது பெரும்பாலும் அவரை சார்ந்து இருந்த நிலையில், அவரது ஆட்டத்திறமை எதிரணிகளை மிரட்டும் அளவில் இருக்கவில்லை. இவருக்கு அடுத்து நிற்கும், மூன்று மிட்-பீல்ட் வீரர்கள் மூன்று ஆட்டங்களிலும் சுமாராகவே ஆடினார்கள். வாய்ப்புகளை பயன்படுத்தி கோல் அடிக்க வேண்டிய இவர்கள், அதை திறம்பட செய்யவில்லை. மொத்தத்தில் கிடைத்தது, ஸ்வீடனுக்கு எதிராக கிடைத்த இரண்டு கோல்கள் மட்டுமே. மற்ற இரண்டு அணிகளுக்கு எதிராக, ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது பெரிய ஏமாற்றம்.

#4 சரி செய்யப்படாத தடுமாற்றம்

#4 சரி செய்யப்படாத தடுமாற்றம்

மிகச் சிறந்த வீர்கள், கடந்த சில வருடங்களாக கிடைத்த தொடர் வெற்றிகள் எல்லாம் இருந்தும் சொதப்பியது எங்கே? வீரர்கள் மெக்ஸிகோவுக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தங்கள் தடுமாற்றத்தை வெளிக்காட்டி விட்டார்கள். அடுத்த ஆட்டங்களில், அதை சரி செய்து இருக்கலாம் அல்லது வீரர்களை மாற்றி இருக்கலாம். மிகக் குறைந்த காலமே இருந்ததால், தொடர் தொடங்கும் முன்பு செய்து வைத்த திட்டங்களின்படியே கடைசி வரை ஆடியதன் விளைவு, குரூப் சுற்றிலேயே வெளியேறும்படி ஆகி விட்டது. கொரியாவை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற எண்ணத்தால், தங்கள் தவறுகளை பெரிதாக எடுக்காமல் விட்டிருக்கலாம்.

#3 பழசு உள்ளே, புதுசு வெளியே

#3 பழசு உள்ளே, புதுசு வெளியே

ஜெர்மனியின் முதல் ஆட்டத்தில், பதினோரு தொடக்க வீரர்களில் ஐந்து வீரர்கள் 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும், ஏழு வீரர்கள் 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும் முதல் ஆட்டத்தை தொடங்கிய வீரர்கள். இப்படி, ஜெர்மனியின் நம்பிக்கை முழுவதும் மூத்த வீரர்கள் மேல் திரும்ப, இளைய வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. மூத்த வீரர்கள் ஒய்வு எடுக்க நேர்ந்தாலோ, காயம் ஏற்பட்டாலோ மட்டுமே இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றார்கள். இளம் வீரர்கள் வேகமாகவும், புதிய கோணங்களிலும் செயல்படுவார்கள். அந்த இழப்பு, ஜெர்மனியின் தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணம்.

#2 வியூகம்

#2 வியூகம்

ஜெர்மனி பல ஆண்டுகளாக தான் பயன்படுத்தும் 4-2-3-1 (4 defence, 2 double six, 3 mid-field, 1 striker) என்ற ஒரே வியூகத்தை அனைத்து போட்டியிலும் பயன்படுத்தியது. இதை எதிரணிகள் சாதகமாக பயன்படுத்தி, அவர்கள் வியூகத்தின் வலுவற்ற பகுதிகளை உடைத்து தாக்குதல் பாணியில் ஆடினர். ஜெர்மனி, ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் தன் வியூகத்தை மாற்றி ஆடியபோதுதான் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

#1 மறுக்கப்பட்ட இளம் வீரர்

#1 மறுக்கப்பட்ட இளம் வீரர்

மன்செஸ்டர் சிட்டி அணிக்காக பிரீமியர் லீக் ஆட்டங்களில் ஆடி கலக்கிய இளம் வீரர் லெரோய் சேன், ஜெர்மனி அணியில் சேர்க்கப்படவில்லை. இது, இந்த தொடர் தொடங்கும் முன்பே தவறான முடிவாகப் பார்க்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்காமல் போனது மிக முக்கிய காரணங்களில் ஒன்று.







Story first published: Friday, June 29, 2018, 17:58 [IST]
Other articles published on Jun 29, 2018
English summary
Germany's early exit from the world cup came as a shock for the football world. We have listed five reasons for the early exit.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X