For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உலக கோப்பையை ஜெர்மனி வெல்ல காரணங்கள் இவைதான்...

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: அர்ஜென்டினாவைவிட ஜெர்மனி சிறந்த அணி என்பதற்கும், அந்த அணியே கோப்பையை வெல்ல தகுதியான அணி என்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. உலக கோப்பை ஒரு தரமான அணியின் கைகளில் தஞ்சம் புகுந்துள்ளதில் வியப்பேதுமில்லை என்பது, ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா நடுவேயான ஒப்பீட்டை பார்த்தால் தெரிந்துவிடும்.

சாமர்த்தியமான கோல் கீப்பர்

சாமர்த்தியமான கோல் கீப்பர்

ஜெர்மனி கோல் கீப்பர் மனுவேல் நெயுர் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இதற்காக தங்க கையுறை விருதை அவர் தட்டிச் சென்றுள்ளார். அரையிறுதி போட்டியில் ஜெர்மனி 7 கோல் அடித்தபோதும், பிரேசில் பதிலுக்கு ஒரு கோல்தான் போட முடிந்தது. இதற்கு ஜெர்மனியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் ஒரு காரணம் என்றால், மனுவேல் நெயுரும் மிக முக்கிய காரணம். இவருக்கு, அணியின் தடுப்பாட்டக்காரர், மேட்ஸ் ஹுமேல் மிகச்சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்.

நடுவரிசையில் வலிமை

நடுவரிசையில் வலிமை

அர்ஜென்டினாவை ஒப்பிட்டால் நடுவரிசையில் ஜெர்மனி மிகவும் வலிமையாக இருந்தது. டோனி குரூஸ், பாஸ்டியன் ஸ்வெயின்ஸ்டிகர், ஷமி கீதிரா ஆகிய வீரர்கள் நடுவரிசையில் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். இதன் காரணமாகவே தங்க பந்து விருதுக்கான போட்டியாளர் பட்டியலில் குரூஸ் பெயரும் இடம் பெற்றிருந்தது.

மெஸ்சியை மட்டுமே நம்பிய அர்ஜென்டினா

மெஸ்சியை மட்டுமே நம்பிய அர்ஜென்டினா

லியோனல் மெஸ்சி என்ற ஒரு நட்சத்திர வீரரை மட்டுமே அர்ஜென்டினா சார்ந்து விளையாடியது. டி மரியா, அகுயேரோ, ஹிகுயைன், லவேஸ்சி ஆகிய நல்ல வீரர்கள் இருந்தாலும், ஏனோ சோபிக்கவில்லை. பெனால்டி ஷூட்டுகளை தவிர்த்து, அர்ஜென்டினா அடித்த 7 கோல்களில், 6 கோல்களுக்கு மெஸ்சி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியுள்ளார். இதை வைத்தே அர்ஜென்டினாவின் பிற வீரர்கள் ஆட்டத்தை தெரிந்துகொள்ள முடியும்.

மெஸ்சி மேஜிக் எடுபடவில்லை

மெஸ்சி மேஜிக் எடுபடவில்லை

1986ம் ஆண்டு மாரடோனா தனியாளாக அர்ஜென்டினாவை கோப்பையை வெல்ல வைத்தார். ஆனால் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு வீரரின் சாதக, பாதக அம்சங்களை எளிதில் கண்டறிந்து அதை எதிரணியினர் தடுக்க முடியும் என்பதால் மெஸ்சியால், இறுதி போட்டியில், மேஜிக் காண்பிக்க முடியவில்லை.

ஒருங்கிணைந்த ஆட்டம்

ஒருங்கிணைந்த ஆட்டம்

ஜெர்மனி ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாமஸ் முல்லர், குளோஸ், நெயுர் என திரும்பிய பக்கமெல்லாம் நட்சத்திரங்களாக காட்சியளிக்கிறது அந்த அணி. இதில் பலரும் தனித்திறமையை வெளிக்காட்டி விளையாடாததால் ஆசிய நாடுகளுக்கு பரிட்சையமில்லாதவர்கள். ஆனால்

ஒருங்கிணைந்த வீர்ரகள். அடுத்தடுத்து நான்கு உலக கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்கு ஜெர்மனி வந்துள்ளது அந்த வீரர்கள் அனைவரின் ஒருங்கிணைப்புக்கு சான்று.

அதிகரித்த தன்னம்பிக்கை

அதிகரித்த தன்னம்பிக்கை

அரையிறுதியில், பிரேசிலுடன் பெற்ற அபார வெற்றி உளவியல் ரீதியாக ஜெர்மனியின் தன்னம்பிக்கையை மிகவும் அதிகப்படுத்தியிருந்தது. அதே நேரம், அரையிறுதியில், நெதர்லாந்தை, அர்ஜென்டினா எளிதில் வீழ்த்த முடியவில்லை. மிகவும் போராடி, பெனால்டி ஷூட்டில்தான் அர்ஜென்டினா வெற்றி கண்டது. எனவே ஜெர்மனியின் உச்சாகத்தோடு, அர்ஜென்டினாவின் வெற்றி உற்சாகத்தை ஒப்பிட முடியாது.

இவை போன்ற காரணங்கள் ஜெர்மனியை உலக சாம்பியனாக்க உதவின.

Story first published: Monday, July 14, 2014, 12:27 [IST]
Other articles published on Jul 14, 2014
English summary
The 2014 FIFA World Cup, after so much of action, finally boils down to the solitary match which will decide the outcome of an extraordinary tournament. Germany, who for long have been choking in the final stages in previous editions, find themselves one win away from victory and a Messi-led Argentina is all that stands in the way. We take a look at reasons why Germany will walk end the night with their fourth World Cup trophy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X