பிரபல கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

ரியோ : பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலை சேர்ந்த 40 வயது நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோ கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார்.

அவர் இரண்டு முறை ஃபிபா கால்பந்து வீரர் விருதை கைப்பற்றியவர். அவர் இது பற்றி வெளிட்ட பதிவில் நான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தேன். அதன் முடிவு பாஸிடிவ் என வந்துள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என அவர் கூறி உள்ளார்.

பெலோ ஹரிசான்டே எனும் நகரத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார் அவர். அப்போது தான் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. அங்கே ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கும் ரொனால்டின்ஹோ அங்கேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு ரொனால்டின்ஹோ மற்றும் அவரது சகோதரர் ராபர்டோ ஆஸிஸ் பராகுவேவில் கைது செய்யப்பட்டு ஐந்து மாதம் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டின்ஹோ மற்றும் அவரது சகோதரர் போலி பாஸ்போர்ட்டில் பாராகுவே நாட்டிற்கு சென்றதால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் பின்னர் பெரிய தொகைக்கு பெயில் கொடுத்த உடன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டனர். அந்த பிரச்சனையில் இருந்து தற்காலிகமாக மீண்ட ரொனால்டின்ஹோ தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கி உள்ளார். அவரது ரசிகர்கள் இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் மீண்டு வர வாழ்த்தி வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Ronaldinho tested positive for Coronavirus
Story first published: Monday, October 26, 2020, 18:37 [IST]
Other articles published on Oct 26, 2020
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X