உலகக் கோப்பைக்கு முன்பு "செக்ஸ்".. எங்கள் வெற்றிக்கு அதுவே காரணம் - ஒப்புக் கொண்ட பிரபல வீரர்

பிரேசில்: கால்பந்து விளையாட்டில் பொதுவாக ஒரு கலாச்சாரம் உண்டு. அதாவது போட்டிக்கு முன்பாக வீரர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது. அதை ஏன் இப்போது பேசுகிறோம் தெரியுமா?

காரணம், இன்று (ஜூன்.30) 19 வருடங்களுக்கு முன்பு.. அதாவது 2002ம் ஆண்டு இதே நாள், கால்பந்து உலகக்கோப்பையை ஐந்தாவது முறையாக கையில் ஏந்தியது பிரேசில் அணி.

ஆனால், அந்த காலக்கட்டத்தில் அவர்களது வெற்றிக்கு காரணமாக சொல்லப்பட்டது என்ன தெரியுமா? செக்ஸ்..

மிரட்டலான கால்பந்து மேட்ச்.. ஒரேயொரு மிரட்டலான கால்பந்து மேட்ச்.. ஒரேயொரு

 பிரேசில் vs ஜெர்மனி

பிரேசில் vs ஜெர்மனி

ஆம்! 2002ல் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், சரிக்கு சமமான பலத்துடன் விளங்கிய பிரேசில், ஜெர்மனி அணிகள் மோதின. ஏற்கனவே நான்கு முறை உலகக் கோப்பை வென்றிருக்கும் பிரேசில் இறுதிப் போட்டியில் விளையாடியதால், அப்போது பலரும், தங்கள் அலுவலக வேலையை ராஜினாமா செய்துவிட்டு நேரில் போட்டியைச் சென்று பார்த்த சம்பவங்கள் அரங்கேறின.

 5வது முறை சாம்பியன்

5வது முறை சாம்பியன்

மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த ரசிகர்களின் ஆர்ப்பரித்த கோஷங்கள் இடையே, போட்டி தொடங்கியது. தொடக்கம் முதலே, பிரேசில் கை ஓங்கியிருக்க, ஜெர்மனி ஒருக்கட்டத்தில் அட்டாக் பாணியை தவிர்த்து, டிஃபென்ட செய்யத் தொடங்கியது. ஆனால், எதற்கும் அசராத பிரேசில் அணியில், ரொனால்டோ.. கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லீங்க.. இவரு வேற ரகம். பழைய பாட்ஷா. ரொனால்டோ 2 கோல்கள் அடிக்க, கோப்பையை கைப்பற்றியது பிரேசில். ஐந்து முறை உலக சாம்பியன் எனும் பெருமையையும் பெற்றது.

 ரொனால்டின்ஹோ

ரொனால்டின்ஹோ

அப்போட்டி முடிந்து சில நாட்கள் கழித்தும், கோப்பையை வென்றது குறித்தே சுற்றி சுற்றி செய்திகள் வெளியாகின. அப்போது தான், இறுதிப் போட்டிக்கு முன்பாக, தங்கள் மனைவி மற்றும் பெண் தோழிகளுடன் உடலுறவில் ஈடுபட்டதால் தான் பிரேசில், உலகக் கோப்பையை வென்றது என்று செய்திகள் வெளியாக நியூஸ் சென்சேஷனானது. உண்மையில் அவர்கள் போட்டிக்கு முன்பாக உடலுறவில் ஈடுபட்டார்களா என்று தெரியாது. ஆனால், அதே உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியவரும், பிரேசில் அணியின் முன்னாள் சூப்பர் ஸ்டாரான ரொனால்டின்ஹோ, போட்டிக்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவது நல்ல ரிசல்ட் கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "நான் பார்சிலோனா அணிக்காக விளையாடிய காலத்தில், போட்டிக்கு முன்பாக எப்போதும் செக்ஸில் ஈடுபடுவேன். அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது. மாறாக, மறுநாள் நான் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி விளையாடுவேன். அந்த உணர்வு என்னை போட்டி அன்று முழுவதும் மனநிறைவுடன் வைத்திருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
கணிப்புகள்
VS
English summary
ronaldinho practised sex before games - உலகக் கோப்பை
Story first published: Wednesday, June 30, 2021, 18:24 [IST]
Other articles published on Jun 30, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X