For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுதான்டா இந்தியா… ஹாக்கி அணியை உற்சாகப்படுத்திய கிரிக்கெட் அணி

By Staff

தரங்கா (நியூசிலாந்து):நியூசிலாந்தில் நடக்கும் 4 நாடுகள் அழைப்பு ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா, 6-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது. ஹாக்கி அணியின் வெற்றியைவிட, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்றுள்ள வீரர்கள் உற்சாகப்படுத்தியது சிறப்பாகும்.

இந்தியா, ஜப்பான், பெல்ஜியம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான, நான்கு நாடுகள் அழைப்பு ஹாக்கி போட்டி நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த ஆண்டில் முதல் சர்வதேசப் போட்டியான இதில், நேற்று நடந்த முதல் ஆட்டத்தில், இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

Cricket encourages hockey


தில்பிரீத் சிங், அறிமுக வீரர் விவேக் சாகர் பிரசாத் தலா 2 கோல்களை அடித்தனர். ருபிந்தர் பால் சிங் மற்றும் ஹர்மன்பிரீதி சிங் மற்ற இரண்டு கோல்களை அடித்தனர்.

ஒருபுறம் இந்தப் போட்டியில் நமது ஹாக்கி அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில், நியூசிலாந்தில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி, இந்த ஹாக்கிப் போட்டியின்போது நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ குய்னா அணிகளை வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ள கோச் ராகுல் திராவிட் பயிற்சி அளிக்கும் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில், நமது வீரர்களை உற்சாகப்படுத்தியது பலருடைய பாராட்டையும் பெற்றுள்ளது.

Story first published: Thursday, January 18, 2018, 13:08 [IST]
Other articles published on Jan 18, 2018
English summary
Indian hockey team beat Japan by 6-0
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X