அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி பைனல்.. இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதா?

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

இபோ: ஏழு கடல், ஏழு மலை தாண்டி சென்றால் அங்கு ஒரு குகை இருக்கும். அங்கிருக்கும் விஷ பாம்புகளிடம் இருந்து தப்பி, பயங்கர மரணக் கிணறுகளைத் தாண்டிச் சென்று, அங்கிருக்கும் கூண்டில் இருக்கும் கிளியைக் கொன்றால்தான், ராட்சசன் உயிரை பறிக்க முடியும்.

இது ஏதோ விட்டலாச்சாரியாவின் கதை என்று நீங்கள் நினைத்தால், அதே நிலையில்தான், மலேசியாவில் நடக்கும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் பைனலில் விளையாடும் இந்தியாவின் வாய்ப்பும் உள்ளது.

ஆறு நாடுகள் பங்கேற்கும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் இபோ நகரில் நடந்து வருகிறது.

அதிக அனுபவம் இல்லாத, இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இந்தப் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுடன் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இரண்டாவது ஆட்டத்திலும் தோல்வி

இரண்டாவது ஆட்டத்திலும் தோல்வி

அதற்கடுத்து உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என, டிரா செய்தது இந்திய அணி.

அப்பாடா ஒரு வெற்றி

அப்பாடா ஒரு வெற்றி

மூன்று அடிகள் வாங்கிய பிறகு, திடீரென்று வேகம் எடுத்து வில்லன்களை அடித்து தூள் கிளப்பும் ஹீரோ போல இந்திய அணி துள்ளி எழுந்தது. கடைசியாக மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

முக்கியமான கட்டத்தில் இந்தியா

முக்கியமான கட்டத்தில் இந்தியா

சரி, ஏழு மலை, ஏழு கடலை தாண்டியாச்சு. இனிதான் முக்கியமான கட்டம் உள்ளது. இதுவரை நடந்துள்ள லீக் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றிபெறாத அயர்லாந்து அணியை இந்திய அணி இன்று சந்திக்க உள்ளது.

மற்ற ஆட்டங்களின் முடிவுகள்

மற்ற ஆட்டங்களின் முடிவுகள்

கிளியைப் பிடிக்க வேண்டுமானால், சாரி, சாரி, பைனலுக்கு நுழைய வேண்டுமானால், இன்றைய போட்டியில் மிகப் பெரிய கோல் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும். சரி ஜெயிச்சுடலாம் என்று நினைத்தாலும், மற்ற போட்டிகளின் முடிவுகள் நமக்கு இடைஞ்சலாக உள்ளது.

பைனலில் ஆஸ்திரேலியா

பைனலில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் ஏற்கனவே பைனலுக்கு நுழைந்து விட்டது. அடுத்தது, அர்ஜென்டீனா 7 புள்ளிகள், மலேசியா 6 புள்ளிகள், இங்கிலாந்து 5 புள்ளிகள், இந்தியா, 4 புள்ளிகளுடன் உள்ளன.

மற்ற ஆட்டங்களே முடிவு செய்யும்

மற்ற ஆட்டங்களே முடிவு செய்யும்

அயர்லாந்தை இந்தியா அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே மிகப் பெரிய சவால். அதைத்த தவிர, ஆஸ்திரேலியா, அயர்லாந்தை தோற்கடிக்க வேண்டும். மலேசியா - இங்கிலாந்து ஆட்டம் டிராவாக வேண்டும்.

இது எல்லாம் நடந்தால், இந்தியா பைனலுக்கு நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது. பார்க்கலாம், இந்திய அணி திடீரென ஹீரோவாக மாறி, இந்த சவால்களை எல்லாம் சமாளித்து, பைனலுக்கு போகிறதா என்பதை.

Story first published: Friday, March 9, 2018, 12:16 [IST]
Other articles published on Mar 9, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற