உலகக் கோப்பை ஹாக்கியில் தென்னாப்பிரிக்காவுடன் முதல் மோதல்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்க உள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.

14வது உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தாண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானும் பங்கேற்கிறது. அந்த அணி டி பிரிவில் உள்ளது.

Hockey world cup schedule

மொத்தமுள்ள 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் சி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா, கனடா அணிகள் இடம் பெற்றுள்ளன.

நவம்பர் 28ல் நடக்கும் தனது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா சந்திக்கிறது. டிச., 2ம் தேதி பெல்ஜியத்தையும், டிச., 8ம் தேதி கனடாவையும் சந்திக்கிறது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். அடுத்த இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், பிளே ஆப் சுற்றில் விளையாடும்.

பிரிவுகள்:

ஏ பிரிவு – ஆர்ஜென்டீனா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்

பி பிரிவு – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா

சி பிரிவு – பெல்ஜியம், இந்தியா, கனடா, தென்னாப்பிரிக்கா

டி பரிவு – நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான்.

Story first published: Thursday, March 1, 2018, 10:46 [IST]
Other articles published on Mar 1, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற