For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வான் ஆஸ் திடீர் நீக்கம்

By Mathi

டெல்லி: இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால்வான் ஆஸ் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பால் வான் ஆஸ் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 5 மாதங்கள் இந்திய அணி அவரது தலைமையில் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளது.

Indian hockey coach Paul van Ass sacked

இந்நிலையில் திடீரென அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் சிலாரோவில் தேசிய விளையாட்டு ஆணையம் நடத்திய கூட்டத்திலும் பால் வான் ஆஸ் நேற்று பங்கேற்கவில்லை.

பெல்ஜியம் நாட்டின் அன்ட்வெர்ப் நகரில் நடந்த சர்வதேச பின்ட்ரோ உலக ஹாக்கி லீ்க் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து எவ்வித அறிக்கையும் தராத காரணத்தால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், உலக ஹாக்கி லீக் போட்டியில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காலிறுதி சுற்றில் ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் நரேந்திர பத்ரா ஆடுகளத்திற்குள் நுழைந்து வீரர்களுடன் உரையாடியதை தலைமை பயிற்சியாளர் பால் வான் ஆஸ் தடுத்துள்ளார். மேலும் ஆடுகளத்தை விட்டு வெளியேறுமாறும் அவரை கேட்டுக் கொண்டுள்ளார். இது சக வீரர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது.

இதையடுத்து ஹாக்கி இந்தியா தலைவருக்கும், தலைமை பயிற்சியாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு மூண்டது. இதன் விளைவாகவே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பால் வான் ஆஸ் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Story first published: Monday, July 20, 2015, 17:33 [IST]
Other articles published on Jul 20, 2015
English summary
Barely five months into the job, Indian hockey chief coach Paul van Ass has been sacked. The Hockey India disclosed no reason for removing the Dutchman.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X