For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் ஹாக்கி.. 36 ஆண்டுகளுக்கு பின் காலிறுதிக்கு முன்னேறி இந்திய ஆடவர் அணி சாதனை!

By Karthikeyan

ரியோ டி ஜெனிரோ: 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் காலிறுதிக்கு முன்னேறி இந்திய ஆண்கள் அணி சாதனை படைத்துள்ளது.

பிரேசிலின் டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கோலாகலமாக துவங்கிய விளையாட்டு திருவிழாவில் இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய ஹாக்கி அணி ஸ்ரீஜேஷ் தலைமையில் களமிறங்கியுள்ளது.

Rio Olympics Hockey: Indian men lose 1-2 against Netherlands

பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. அடுத்து நடந்த போட்டியில் ஜெர்மனி அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. பின்னர் அர்ஜென்டினாவுடன் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 2-வது வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் இன்று வலிமையான நெதர்லாந்து அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தியது. முதல் காலிறுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை.

3-வது காலிறுதி ஆட்டத்தில் ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் (31:43) நெதர்லாந்து அணிக்கு ஷாட் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்நாட்டு வீரர் ரோஜியர் ஹாஃப்மன் கோல் அடித்தார். 38-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் ரகுநாத் வக்காலிகா ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்தது.

அதன்பின் நெதர்லாந்து வீரர்களை கோல்கள் அடிக்க விடாமல் இந்திய வீரர்கள் அபாரமான முறையில் தடுத்தார்கள். ஆனால், ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருக்கும் நிலையில் நெதர்லாந்து வீரர் வான் டெர் கோல் அடித்தார். இதனால் 2-1 என நெதர்லாந்து முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடியும் கடைசி வினாடியில், இந்தியாவிற்கு ஷாட் பெனால்டில் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இதனால் நெதர்லாந்து அணி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அர்ஜென்டினா- ஜெர்மனி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா(4-4) ஆனது. இதனையடுத்து இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு, 1980ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக முன்னேறி சாதனை படைத்தது.

Story first published: Friday, August 12, 2016, 10:34 [IST]
Other articles published on Aug 12, 2016
English summary
The Indian men's hockey team reached the quarter-finals after a gap of 36 years at the ongoing Rio Olympics despite beaten 1-2 by the Netherlands for its second loss in four Pool B games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X